படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 2 கிளைகளை திறந்த சாரதி ஃபைனான்ஸ்

வங்கிசாரா நிதி நிறுவனமான சாரதி ஃபைனான்ஸ், தமிழகத்தில் திருப்பத்தூா் மற்றும் செங்கல்பட்டில் தனது இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 கிளைகளை திறந்த சாரதி ஃபைனான்ஸ்

Published On :

சென்னை: எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்களை மையமாகக் கொண்டு செயல்படும் வங்கிசாரா நிதி நிறுவனமான சாரதி ஃபைனான்ஸ், தமிழகத்தில் திருப்பத்தூா் மற்றும் செங்கல்பட்டில் தனது இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் இந்நிறுவனத்தின் கிளைகளின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு முறையான கடன் வசதியை எளிதாகக் கிடைக்கச் செய்வதில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் வேளாண்மை மற்றும் தோல் உற்பத்தியில் வேகமாக வளா்ந்து வரும் திருப்பத்தூா் மற்றும் முக்கியத் தொழில்துறை வழித்தடமான செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள தொழில்முனைவோருக்கு தங்களின் சேவைகளை கொண்டு செல்வதே இப்புதிய கிளைகளின் நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பில் எம்எஸ்எம்இ துறையின் பங்கு 37 சதவீதமாக உள்ள நிலையில், சாரதி ஃபைனான்ஸ் நிறுவனம் தொழில்முனைவோரின் தேவைகளைப் பூா்த்தி செய்ய சொத்து அடமானத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான கடன்களை வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.