
அமெரிக்க-ஈரான் மோதல் எதிரொலி: ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் கிடுகிடு உயர்வு!
அமெரிக்க-ஈரான் இடையே மோதல் தொடங்கியதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரிப்பு.

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
புதுதில்லி: அமெரிக்க-ஈரான் இடையே மீண்டும் மோதல் தொடங்கியதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து 6 வது அமர்வாக கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த வர்த்தகத்தில் பேரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1 சதவீதம் அதிகரித்து ரூ. 8,592 ஐ எட்டியது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், செப்டம்பர் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் பேரல் ஒன்றுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.8,592 ஐ எட்டியது. அதே வேளையில் அக்டோபர் மாத ஒப்பந்தத்தில் பேரல் ஒன்றுக்கு ரூ.56 அதிகரித்து ரூ. 8,391 ஐ எட்டியது.
ஈரானிய இலக்குகள் மீதான புதிய தாக்குதல்களை முடித்துவிட்டதாக அமெரிக்க கூறியுள்ள நிலையில், தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
உலகளாவிய சந்தைகளில், இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்சில், நவம்பர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் எண்ணெய் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் தொடர்ந்து 3 வது அமர்வாக உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 2.36 டாலர் அதிகரித்து 97.01 டாலராக உள்ளது.
நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்சில், அக்டோபர் மாத ஒப்பந்தத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எண்ணெய் தொடர்ந்து 3 வது அமர்வாக உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 0.57 சதவீதம் அதிகரித்து 90.73 டாலராக வர்த்தகமானது.
ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து 2 வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, உலக சந்தைகளில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 97 அமெரிக்க டாலரை நோக்கியும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 92 அமெரிக்க டாலரை நெருங்கியும் உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Summary
Rising for the sixth consecutive session, crude oil futures jumped to Rs 8,592 per barrel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






