ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி

ஆசனம் 5. வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் உறுதி என்று பெயர். புராணங்களில் வஜ்ராயுதம் கையாளப்பட்ட வரலாறுகள் உள்ளன.

News image
Updated On :14 அக்டோபர் 2015, 9:55 am

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம்

8. சமாதி (சம நோக்கு)

நண்பேன்…டா

தனியார் மின்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளர் வேணுகோபாலன், ஒருநாள் லஞ்ச் பிரேக்கில் திடீரென்று செக்யூரிட்டி பலராமனைத் தனது அறைக்கு வரச் சொன்னார்.

பலராமன் பயந்துகொண்டே உள்ளே போனார்.

‘என்ன பலராமா என்னை மறந்துட்டியா. நான்தான்டா கோபு, நெனைவில்லே? மாயவரம் சிங்காரம்பிள்ளை ஸ்கூல்ல மூணாவதுல படிச்சோம்ல? அப்பவே நீ கூச்சம்டா! யாருகிட்டேயும் பழகமாட்டே. இப்பவும் அப்படித்தான் இருக்கே’.

பலராமன் உற்று உற்றுப் பார்த்தார்.

‘நினைவுக்கு எட்டலை சார். வயது அறுவத்தஞ்சாச்சுல்ல. எட்டு வயசுங்கறது பச்சைப் பிள்ளை வயசு. நீங்க நல்லா நெனைவு வெச்சிருக்கீங்க. எனக்கு எதுவுமே நினைவில்லை சார். என்னை மன்னிச்சுடுங்க சார்’.

‘என்னடா, சார் கீர்னு. நீ என்கூடப் படிச்சவன்டா. நண்பேன்டா. நீ மறக்கலாம். நான் மறப்பேனாடா. உட்காருடா.

பலராமனுக்குத் தர்மசங்கடம். வயதான காலத்தில் அதிகாரியாக வந்து எவனோ இப்படி அவமானப்படுத்திக்கிட்டிருக்கானே என்று நொந்துகொண்டார்.

‘இப்ப உட்காரப் போறியா, இல்லையாடா?’

‘சரியா தெரியாம எப்படி சார் உட்கார்றது’ என்றபடி, நரை வழுக்கையை நீவினார்.

‘மறுபடியும் சார் கீர்ன்னு சொன்னா பொல்லாதவனாயிடுவேன். படவா, இப்படி வந்து உட்காருடா. இனிமே, தெனமும் நீ என்கூட என் சாப்பாட்டைத்தான் சாப்பிடணும். தெரிஞ்சுதா? மாயவரம் ஸ்கூல்ல மத்தியானம் சுட்டெரிக்கற வெயில்ல நாம ஓடி விளையான்டதெல்லாம் மறந்துபோச்சாடா?’

பலராமனுக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. முகம்தான் நினைவில் இல்லை.

அலுவலகக் கூட்டத்தில், பலராமனைத் தன்னுடன் படித்த பள்ளித் தோழன் என்று அறிமுகப்படுத்தி கைத்தட்டலைப் பெற்றார் வேணுகோபாலன்.

இரவில் படுத்துக்கொண்டு பள்ளிக்கால மாணவர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டுவந்தார் பலராமன்.

நட்சத்திரங்களை எண்ணியதுபோல உறங்கிப்போனார்.

‘பலராமா, நான் பெரிய பதவியில இருக்கேன்டா. உனக்கு என்னன்ன வசதிகள் வேணுமோ வாங்கிக்கோ. செக்யூரிட்டி பீரோ மூலமா தர்றது இல்லாம, கம்பெனி சார்பாகவும் உனக்கு இன்னொரு சம்பளம் போட்டிருக்கேன். உஷ்… மறுக்கக்கூடாது!’

வேணுகோபாலுக்குத் தலை சுற்றியது. வழக்கமாகத் தொழுகின்ற பாலகோபாலசாமிதான் இப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று எண்ணிக்கொண்டார்.

சில மாதங்கள் சென்றன.

தன் மகளுக்குத் திருமணம் என்று கூறி பத்திரிகை வைத்தபோது, தயங்காமல் ஒரு லட்ச ரூபாயை எடுத்து நீட்டி பலராமனுக்கு இன்ப அதிர்ச்சியூட்டினார் வேணுகோபால்.

வேணுகோபாலின் பள்ளிக்கால முகம் தெரியாத குறைதான் பலராமனுக்கு.

பிற்பகல் 1.30 மணி.

வேணுகோபாலின் அழைப்புக்காகப் பசியோடு காத்திருந்தார் பலராமன். ஒரு மணிக்குச் சரியாக அழைப்பு வரும். இரண்டு மணியாகியும் காலிங் பெல் வரவில்லை.

வேலையாக இருப்பார் என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தார் பலராமன்.

பியூன் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு அலறிக்கொண்டு ஓடிவந்தார்.

வேணுகோபால், மேஜையில் பேனாவைப் பிடித்தபடி கவிழ்ந்து கிடந்தார்.

அலுவலகப் பணியாளர்கள் பாய்ந்து சென்றனர். டாக்டர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பலராமன் தவிதவித்தார். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, திடீர் இதய நோயால் உயிர் பிரிந்து முக்கால் மணி நேரம் ஆகிறது என்று கூறியபோது, பலராமன் அதிர்ச்சியோடு சரிந்தார்.

உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பலராமன்தான் அவரது உடலைத் தலைக்கு மேலே உரிமையோடு சுமந்தார்.

வேணுகோபாலின் உடலை ஃப்ரீசரில் வைத்திருந்தார்கள்.

வேணுகோபாலின் மனைவி, மேனேஜரிடம் செக்யூரிட்டி பலராமன் யார் என்று கேட்டு அருகே வரவழைத்தார்.

நீங்கதான் செக்யூரிட்டி பலராமனா? உங்க மேலதாங்க அவருக்கு ரொம்பப் பிரியம். உங்களைப் பத்தி என்கிட்ட அடிக்கடி சொல்வாரு.

‘எங்க ஆபீஸ்ல என் வயசுல ஒருத்தர் செக்யூரிட்டியா இருக்காரு. ரொம்ப நல்ல மனுஷன். ஏழை. என்னை அவர் மரியாதையோடு வணங்கற அழகே தனின்னு சொல்லுவாரு…’

‘ஒரே வயசுக்காரங்கள்ல ஒருத்தன் ஏழையாவும் ஒருத்தர் பணக்காரனாவும் இருக்கறது என்ன நியாயம்? கடவுள் அப்படிப் படைச்சிருக்கலாம். ஆனா மனுஷன் நெனைச்சா அதை மாத்திக் காட்டலாம். நான் மாத்திக் காட்டறேன். ஆமாம். அந்த செக்யூரிட்டி பலராமனை நான் நண்பனாக்கிட்டேன்னு சொல்லுவாரு’.

‘நானோ புளிச்ச ஏப்பக்காரன். அவரோ பசி ஏப்பக்காரன். நான் வசதியோட பிறந்து வசதியோட வாழ்ந்து வசதியோட ரிடையர்டு ஆனவன். இன்னும் என்னை வசதிகள் விடலை. ஆனா அந்தப் பலராமனோ ஏழையாவே பிறந்து ஏழையாவே வளர்ந்து ஏழையாவே இருந்துகிட்டிருக்காரு. அவரோட பழகி அவருக்கு உதவணும்னு தோணுச்சு. அவரோட பயோ டேட்டாவை எடுத்துப் பார்த்தேன். மாயவரத்துலதான் படிச்சிருக்காரு. அதுபோதாதா. நான் மாயவரம் பக்கமே போனதில்ல. ஆனா அந்த ஸ்கூல்ல நானும் அவரோட படிச்சதா ஒரு பொய்யச் சொல்லி அவரை நம்பவெச்சேன். அன்னிலேர்ந்து நானும் அவரும் நண்பர்கள் ஆகிட்டோம். தினமும் நானும் பலராமனும் சேர்ந்துதான் சாப்பிடறோம்’னு சொல்வாருங்க.

‘ஆனா, இந்த அளவுக்கு அவரோட மனசுல இடம் பிடிச்சவங்க யாரும் இல்லீங்க. வீட்டுக்கு வந்துட்டாருன்னா விடியற வரை உங்க பேச்சாத்தான் இருக்கும். நீங்க ரொம்ப குடுத்து வச்சவருங்க’ என்று சொல்லிவிட்டு, முந்தானையால் வாயைப் பொத்திக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், திருமதி வேணுகோபால்.

பலராமன், பச்சைக் குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதார்.

உத்திரகிரியை நாளன்று, கம்பெனி உரிமையாளர் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை அஞ்சலிக் கூட்டத்தில் அறிவித்தார்.

‘நம்ம ஜிஎம் வேணுகோபால் சார் உயிர் பிரியறப்போ, கையிலே பேனாவோடதான் இருந்தாரு. ‘செக்-புக்’ல தன்னோட கிளாஸ்மேட் செச்யூரிட்டி மிஸ்டர் பலராமன் பேருக்கு அஞ்சு லட்ச ரூபாயை எழுதிக் கையெழுத்து போட்டுட்டுத்தான் கண்ணை மூடியிருக்காரு. நண்பரின் மீது அவர் எவ்வளவு மரியாதை வச்சிருக்காரு பாருங்க. கூடப்படிச்ச நண்பனை ஏழைன்னு சொல்லி நிராகரிக்கல. மாறாக, நண்பன் ஏழைங்கறதுக்காக நிறைய அன்பு காட்டி இருக்காரு. அதுக்குப் பெரிய மனசு வேணும். யாரையும் குறைச்சி மதிப்பிடக்கூடாது. எல்லாரையும் சமமா பார்க்கணும். வேணுகோபால் சார் சார்பாக இந்த ‘செக்கை’ திரு. பலராமன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்…’

ஆசனம் 5. வஜ்ராசனம்

பெயர்க் காரணம்

வஜ்ரம் என்றால் உறுதி என்று பெயர். புராணங்களில் வஜ்ராயுதம் கையாளப்பட்ட வரலாறுகள் உள்ளன. அந்த ஆயுதம் வெல்லாமல் திரும்பாது. எப்படிப்பட்ட பகைவர்களையும் வென்றுவிடும் ஆற்றல்மிக்கது. அந்த ஆயுதத்தை எந்த வகையிலும் எவராலும் அழிக்க முடியாது என்பதே அதன் தனிச் சிறப்பாகும்.

அந்த ஆயுதமானது, தீதிச முனிவரின் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டது என்று கூறுவர். அவர் எந்த நேரமும் வஜ்ராசனத்திலேயே இருப்பவர் என்ற குறிப்பு உள்ளது. வஜ்ராசனத்தில் இருந்தால், எலும்புகள் இரும்பைவிடப் பலம் உள்ளதாக மாறும். உடையாது. வஜ்ராசனத்தில் இருப்பவர்கள் உடலும் அதே அளவு உறுதியோடு இருக்கும்.

செய்முறை

விரிப்பின் மீது மண்டியிட்டு அமர்ந்துகொள்ளவும்.

கைகள் இரண்டையும் இரண்டு கால் மூட்டுகளின் மீதும் வைத்துக்கொள்ளவும்.

முதுகு எலும்பு கூனல் போடாமல் இருக்க வேண்டும்.

கண்களை மூடிக்கொள்ளவும்.

நீண்ட நெடுஞ்சுவாசம் எடுக்கவும். பத்மாசனத்தில் செய்ததுபோல் வயிற்றை உள்ளும் புறமும் அசைத்துச் சுவாசிப்பது நல்லது.

முக்கியக் குறிப்பு

மற்ற எல்லா வகை ஆசனங்களையும், வயிறு காலியாக இருக்கும்போது மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், இந்த வஜ்ராசனத்தை வயிறு காலியாக இருக்கும்போது மட்டுமல்லாமல், வயிற்றில் உணவு இருக்கும்போதேகூட செய்யலாம்.

விருந்துகளில் தவிர்க்க முடியாமல் நிறையச் சாப்பிட நேரிடும். எண்ணெய்ப் பலகாரங்களை விரும்பித் தின்றிருக்கக்கூடும். அதுபோன்ற சமயங்களில், செரிமானத்தைத் தூண்டும் சோடா, வெற்றிலைப் பாக்கு, ஜெலுசில் போன்ற மாற்று முயற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை.

இந்த ஆசனத்தில் இருந்தபடி, ஐந்து நிமிடங்களுக்குச் சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் வயிறு கபகப என்று பசிக்க ஆரம்பிக்கும்.

உடலை வலுவுடன் மாற்றக்கூடிய ஒப்பற்ற ஆசனம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.