விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆசனம் 32. சக்கராசனம்

சக்கராசனத்தில் இருந்தபடியே கைகளை மடக்கி மடக்கி நீட்டி, உடலைத் திரும்பத் திரும்பத் தூக்கித் தூக்கி நிறுத்தவும்.

News image
Updated On :27 ஏப்ரல் 2016, 6:51 am

கே.எஸ். இளமதி


அஷ்டாங்கயோகம்

நியமம்

தனிக்குடித்தனம்

பரஞ்ஜோதி - கஸ்தூரி தம்பதியரின் மூன்றாவது மகன் சுரேஸுக்குத் திருமணம் ஆயிற்று.

முதலிரவு.

கல்யாணத்துக்கு முன்னால நீ யாரையாச்சும் காதலிச்சிருக்கியா நித்யா.

காலேஜ்ல விமலன்னு ஒருத்தன் என்னையே சுத்திச் சுத்தி வந்தான். அவன எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவே இல்ல. ஆனாலும் அவனோட தொல்லை தாங்கல. வீட்டுல விஷயம் தெரிஞ்சிபோய், என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. நான் யாரையுமே காதலிக்கல. ஆமா, நீங்க…?

நான் ஒருத்திய காதலிச்சேன். அவ உன்னை மாதிரியே நல்ல செவப்பா இருப்பா என்று நித்யாவின் கன்னத்தைக் கிள்ளினான்.

அவள் தட்டிவிட்டாள்.

கல்யாணம் பண்ணா உன்னைத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நின்னேன்.

நித்யாவுக்கு கோபம் பொங்கியது. கண்கள் கலங்கின. அவ பேரு?

அழகுக்கு ஏத்த மாதிரி அழகான பேரு.

நித்யா வேகமாக எழுந்து சென்று கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினாள்.

உறவுக்காரப் பெண்கள் ஓடிவந்தார்கள். என்ன ஏது என்று விசாரித்தார்கள். உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

நித்யா என்ன இது. உள்ள வா. முழுசா கேட்காம வந்துட்டியே என்றபடி அவளது கையை பிடித்து இழுத்து கதவை மூடினான் சுரேஷ்.

நித்யா கல்யாணத்துக்கு முன்னாடி நான் காதலிச்சது உன்னத்தான். அதை கொஞ்சம் த்ரில்லா சொல்லலாம்னு பார்த்தேன். சத்தியமா சொல்றேன் நித்யா, நான் யாரையுமே காதலிக்கலை என்று சொல்ல,

நித்யா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அவனைக் கட்டிக்கொண்டாள்,

மறுநாள் அதிகாலை.

வீட்டுத் தோட்டத்தில் ஒரு தாமரைக் குளம். அதிலிருந்துதான் தினமும் தாமரை, அல்லிப் பூக்களைப் பறித்து பூஜை செய்வது வழக்கம்.

அன்று அந்தக் குளத்தில் ஒரு அதிசயம். ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.

என்னங்க, கொக்கு ஒத்தைக்கால்ல நிக்குதே… என்றாள் கஸ்தூரி.

கொக்கு அப்படித்தான் நிக்கும்.

இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கு.

பைத்தியமே, கொக்கு ஏன் ஒத்தக் கால்ல நிக்குது தெரியுமா?

ஏன்…

பறவைங்க ரெண்டு கால்லதான் நிக்கும்னு மீனுக்குத் தெரியும். அதனால பக்கத்துல வராது. ஒத்தக்கால்ல நின்னா, ஏதோ செடிதான் இருக்குன்னு நெனச்சி மீனுங்க அங்க வரும். வந்த ஒடனே லபக்னு கொக்கு கொத்திக்கும்.

ஓ, இதான் காரணமா? இத்தன நாளா தெரியாம இருந்துட்டேன்.

*

இரண்டே மாதத்தில், சுரேஷுடன் தனிக்குடித்தனம் போனாள் நித்யா.

வீட்டில் பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார்கள்.

சென்னை மோசமான ஊரும்மா. திருடங்க ஜாஸ்தி. கூட்டுக் குடும்பமா இருக்கறதுதான் நல்லது. தனி வீட்டுக்கு போனா பிரச்னை அதிகம். சொன்னா கேளும்மா…

ம்ஹும்… யார் பேச்சையும் கேட்காமல், ஒற்றைக் காலில் நின்று சுரேஷை அழைத்துச் சென்றுவிட்டாள் நித்யா.

*

அன்று காலை, வீட்டு வாசலில் காய்கறிக்காரனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் நித்யா.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாகச் சென்ற ஒருவன், வீட்டு வாசலில் நித்யா நிற்பதைப் பார்த்து பைக்கை திருப்பிக்கொண்டு வந்தான்.

ஹாய் நித்யா, நீ இங்கயா இருக்கே?

ஏய் விமலன், நீயா. என்னடா இந்தப் பக்கம்?

கல்லூரியில் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தவன்.

விமலனை உள்ளே அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, காபி போட கிச்சனுக்குள் சென்றாள் நித்யா.

அந்தச் சமயம், திடீர் அலுவலகப் பயணமாக வெளியூர் செல்ல கிளம்புவதற்காக வீட்டுக்கு வந்த சுரேஷுக்கு அதிர்ச்சி. வாசலில் புது ஷூ. குழப்பத்தோடு உள்ளே நுழைந்தவன், விமலனைப் பார்த்து, யார் நீங்க என்று கேட்டான்.

ஐ ஆம் விமலன். நித்யாவோட காலேஜ்மேட் என்று கைநீட்டினான்.

விமலன் என்றதும் சுரேஷுக்கு தூக்கிவாரிப்போட்டது. கோவம் மற்றும் எரிச்சலுடன் கிச்சனுக்கு வந்த சுரேஷ், என்ன நித்யா, உன்னோட பழைய காதலனுக்கு உபசரிப்பா. இதுக்குதான் சண்டை போட்டு தனிக்குடித்தனம் வந்தியா…

என்னங்க பேசறீங்க. எனக்கே தெரியாது. காய்கறி வாங்க வெளியே நின்னிட்டிருந்தேன். அந்த வழியா போனவன் என்னை பார்த்து வீட்டுக்கு வந்துட்டான்.

தான் சிறுசேரியில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாக, இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான் விமலன்.

அன்று முதல், சுரேஷ் – நித்யா இருவருக்கும் இடையே லேசான உட்பூசல்.

*

ஒருநாள் மதியம் வீட்டுக்கு வந்தான் சுரேஷ். மாலையில் நடைபெறும் ஆபீஸ் நிகழ்ச்சிக்கு டிரெஸ் மாற்றிக்கொள்ள வந்து மாற்றிக்கொண்டு வெளியே வந்த நேரத்தில் வீட்டு வாசலில் பைக் சத்தம்.

விமலன்.

நித்யாவை ஓரக்கண்ணால் பார்த்து முறைத்தான் சுரேஷ்.

நித்யாவுக்கு தர்மசங்கடமான நிலைமையை உணர்ந்து, விமலன் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டான்.

நித்யாவோட அனுமதி இல்லாம விமலன் வீட்டுக்கு வரமாட்டான். இதுக்காகத்தான் தனி வீடு பார்த்து வரணுன்னு அடம் பிடிச்சாளா. ச்சே, பெத்தவங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காம தனிக்குடித்தனம் வந்துட்டேனே… மனத்துக்குள் புலம்பியவாறே ஆபீஸுக்குக் கிளம்பினான் சுரேஷ்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. மனத்தில் ஏகப்பட்ட குழப்பம்.

பழைய காதலன்தானே. ஒருநாள் நிச்சயமா அவனோட ஓடிப்போயிடுவா. இப்ப தனிக்குடித்தனம் வந்ததால தெனமும் சந்திச்சி பேசி காதலை ஸ்ட்ராங் பண்ணிக்கிறாங்க… ச்சே, நல்லதுக்கே காலம் இல்ல.

காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்தவனுக்கு அதிர்ச்சி. வீட்டின் பூட்டு அவனை வரவேற்றது.

நெனச்சேன்… இவ்ளோ சீக்கிரமா நடக்கும்னு நெனக்கிலையே… என்ற தடுமாற்றத்துடன், தன்னிடம் இருந்த சாவியால் பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்தான்.

டைமிங் டேபிளில் ஒரு கடிதம். அதன் மேல் நித்யாவின் மொபைல்.

அதிர்ச்சி ப்ளஸ் கோவத்துடன், கடிதத்தை எடுத்துப் படித்தான்.

என்னை மன்னிச்சிடுங்க. உங்களை அப்பா அம்மாகிட்ட இருந்து பிரிச்சி தனிக்குடித்தனம் கூட்டி வந்தது தப்புதாங்க. நான் பண்ண தப்புக்காக நீங்க அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு திரும்பவும் அவங்களோட போய் சேர்ந்துக்கங்க.

என்னை காதலிச்ச விமலன், இப்படி திடீர்னு என் வாழ்க்கையில் வருவான்னு எதிர்பாக்கல. எனக்கு பொய் சொல்லத் தெரியாது. உங்ககிட்ட நான் சொன்னதான் நிஜம்.

ஆனா நீங்க, உங்க காதல என்கிட்ட மறைச்சிட்டீங்க. இப்போ என்னைத் தேடி வந்த விமலன் மாதிரி, உங்க காதலியும் உங்களைத் தேடி ஒருநாள் கண்டிப்பா வருவா. இனி அவளோட உங்க வாழ்க்கைய வெச்சிக்கங்க. இனிமே என்னை தேடாதீங்க.

இப்படிக்கு,

நித்யா

கடிதத்தைப் படித்ததுமே சுரேஷுக்கு தலை சுற்றியது.

அப்படித்தான் இருக்கும். அந்த விமலனோடு நித்யா ஓடிவிட்டாள் என்று மனக்குமுறலுடன் பெற்றோர் வீட்டுக்குப் புறப்பட்டான் சுரேஷ்.

அங்கே வீட்டு வாசலில் ஒரு பெண் நிற்பது தெரிந்தது.

காரில் இருந்து இறங்கிய சுரேஷின் காலில் நித்யா ஓடிவந்து விழுந்தாள்.

என்னை மன்னிச்சுடுங்க சுரேஷ். தனி வீடு போனது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சிடுச்சிங்க. தனிக்குடித்தனம் ஆபத்து, கூட்டுக்குடித்தனம்தான் எப்பவுமே பாதுகாப்பு. அதான், நானே இங்க ஓடிவந்துட்டேன். நான் உங்களோட சேர்ந்து போய் உங்க அப்பா அம்மா கால்ல விழணுன்னுதான் உங்களுக்காக வாசல்லியே காத்திருக்கேன் என்றாள் நித்யா.

சுரேஷ் திக்குமுக்காடிப் போனான்.

லெட்டர்ல உங்க பழைய காதலி உங்களைத் தேடி வருவான்னு எழுதியிருந்தேனே, அவ வேற யாரும் இல்ல. நான்தான். உங்களைத் தேடி வந்துட்டேன். வாங்க உள்ள போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்

இருவரும் கண்ணீர் மல்க, கைகோத்தபடி வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தனர்.

***

ஆசனம்

சக்கராசனம்

பெயர்க் காரணம்

சக்கரம் போல உடலை வளைத்துச் செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு சக்கராசனம் என்று பெயர்.

Story image

செய்முறை

Story image

விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.

பின்னர் கால்களை மடக்கி இடுப்பை உயர்த்தவும்.

இரண்டு கைகளையும், உள்பகுதி கீழ்ப்பக்கம் இருக்கும்படி தலைக்குப் பின்புறம் வைத்து ஊன்றிக்கொள்ளவும்.

பிறகு தலையை உள்பக்கம் இழுத்து, உச்சந்தலையை ஊன்றி நிற்கவும்.

பின்னர் கைகளில் வலுகொடுத்து உடலை மேல் பக்கமாகத் தூக்கி உயரே நிறுத்தவும்.

அதே நிலையில் சில சுவாசங்கள் எடுக்கவும்.

பின்னர், உடலை மெதுவாகத் தளர்த்தி கீழே படுத்து நன்றாக ஓய்வெடுக்கவும்.

கிரியா

சக்கராசனத்தில் இருந்தபடியே கைகளை மடக்கி மடக்கி நீட்டி, உடலைத் திரும்பத் திரும்பத் தூக்கித் தூக்கி நிறுத்தவும்.

Story image

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் பின்பக்கமாக நன்றாக வளைக்கப்படுவதால் முதுகெலும்புகளில் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். எலும்பு இணைப்புகளில் உள்ள தசைநார்கள் வலுவடையும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படாது.

கைகளுக்கு வலு கிடைக்கும்.

மார்பு நன்றாக விரிவடைவதால், நுரையீரல்களால் அதிகமான காற்றை உள்ளிழுக்க முடிகிறது.

பின்னந்தலைக்கு நிறைய ரத்த ஓட்டம் கிடைப்பதால், சிறுமூளையும் பெருமூளையும் சுறுசுறுப்பு அடைகின்றன. இதனால், சிந்தனைத் திறன், செயல் ஆற்றல் அதிகரிக்கும்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.