மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

புடலங்காய் பஜ்ஜி

Published On :

தேவையான பொருட்கள்:
பிஞ்சு புடலங்காய் - 2
கடலை மாவு - 2 கிண்ணம்
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல்
மிளகாய் -  5 (அ) மிளகாய் தூள்  ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: புடலங்காயை வட்டமாக நறுக்கி, அதனுள்ளே இருக்கும் விதையை நீக்கிவிடவும். (மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் நடுத்தரமான அளவில் இருக்க வேண்டும்). பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகாய் அல்லது மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

(அரிசியை ஊற வைத்து அரைப்பதற்கு பதிலாக அரிசி மாவைப் பயன்படுத்தலாம்). அரைத்த விழுதை கடலை மாவுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கி வைத்துள்ள

புடலங்காய் வளையங்களை  பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான புடலங்காய் பஜ்ஜி தயார். சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.