நீ கண் சிமிட்டினால்: ஜெயா வெங்கட்

Updated on
1 min read

கதிரவனே!  நீ
கண் சிமிட்டினால் ......
உயிர்த்து  எழுகின்றன
உயிர்கள்! 

வெண்ணிலவே!  நீ
கண் சிமிட்டினால்......
கவி பாடுகின்றனர்
காதலர்!

கார்மேகமே! நீ 
கண் சிமிட்டினால்......
மண்ணில் விழுகின்றன 
மழைத்துளிகள்!

மலையே!  நீ 
கண் சிமிட்டினால்.....
மயங்கிக் கொட்டுகின்றன
மலையருவிகள்!

நதியே!  நீ 
கண் சிமிட்டினால்.....
நனைந்து  மகிழ்கிறது
நானிலம்!

இயற்கை அன்னையே! நீ
கண் சிமிட்டினால் ......
இன்புற்று வாழ்கிறது
இவ்வையகம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com