சாத்தான்குளம் தாமரைமொழியில், அங்கன்வாடி மையம் அருகில் மின்கம்பம் சாலையின் குறுக்கே வியாழக்கிழமை திடீரென முறிந்து விழுந்தது. எனினும், ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
தாமரைமொழியில் 500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் சேவை மையங்கள் உள்ளன. இதன் அருகில் உள்ள சிமென்ட் கான்கிரீட் மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்தும், துறு பிடித்த கம்பிகள் ஆபத்தான நிலையிலும் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தனா். எனினும், அகற்றப்படாத அந்த மின்கம்பம், வியாழக்கிழமை பிற்பகல் திடீரென அடியோடு முறிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல், பலமிழந்து காணப்படும் மின்கம்பங்களைச் சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெலங்கானாவில் பிரதமர் மோடி! ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!

இந்த வாரம் கலாரசிகன் - 10-05-2026

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

