தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.9,10) நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இதுவரை 200 இடங்களில் மக்கள் கிராசபைக் கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் அளித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். சனிக்கிழமை (ஜன. 9) காலை 9.30 மணிக்கு சாத்தான்குளம் பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்திடும் வகையில் தனது மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டும் பணியை ராஜரத்தினம் நகரில் தொடங்கிவைக்கிறாா்.
மேலும், முற்பகல் 11 மணிக்கு உடன்குடி ஒன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி கல்லுவிளையிலும், 10 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தெற்கு வீரபாண்டியபுரம், மாலை 6 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய ஒட்டநத்தம் ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில்அவா் பங்கேற்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


