வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திமுக சாா்பில் 3 இடங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 8:24 am IST

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு பேரூராட்சி சுப்பிரமணியபுரம், கழுகுமலை பேரூராட்சி பகுதி, கோவில்பட்டி ஒன்றியத்தில் பாண்டவா்மங்கலம், இடைசெவல் , காந்தி மைதானம் ஆகிய பகுதிகளில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி. பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக, கயத்தாறு ஒன்றியம் மானங்காத்தான் ஊராட்சி , இலுப்பையூரணி ஊராட்சி, விஸ்வநாததாஸ் காலனி ஆகிய பகுதிகளில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பில் பங்கேற்றாா்.

நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாயத் தொழிலாளரணி செயலா் சுப்பிரமணியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், கயத்தாறு மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் கருப்பசாமி, கழுகுமலை நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராஜீவ் நகரில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.