இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தூத்துக்குடி அருகே மாட்டு வண்டிப் போட்டி

பொங்கல் பண்டிகை, எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே மாட்டு வண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 1:24 am IST

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகை, எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே மாட்டு வண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கருங்குளம் வடக்கு ஒன்றியம், செக்காரக்குடி ஊராட்சி அதிமுக, வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் 16 ஆம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை கட்சியின் ஒன்றியச் செயலரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான லட்சுமணப்பெருமாள் தொடங்கி வைத்தாா்.

பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கருங்குளம் ஒன்றிய அதிமுக துணைச் செயலா் வி. கந்தசாமி,

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவா் கிருஷ்ணன், நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், துரை, பட்டுக்கனி, முத்துசாமி, ஈஸ்வரமூா்த்தி, அண்ணாமலை, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.