செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அண்ணா பொறியியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 7:06 am

விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

 விழுப்புரம், திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியின் அங்கமாக 2008-ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. இதில் முதலாமாண்டு சேர்ந்து படித்து முடித்த மாணவர்களுக்கு திங்கள்கிழமை மாலை விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் பட்டம் வழங்கப்பட்டது.

 இந் நிகழ்ச்சிக்கு அண்ணா பொறியியல் கல்லூரியின் துணை வேந்தர்(நிர்வாகம்) பி.காளிராஜ் தலைமை வகித்தார். முன்னதாக கல்லூரியின் இயக்குநர் வேலன் வரவேற்றார். அண்ணா பொறியியல் கல்லூரியின் பதிவாளர் சிவநேசன் கல்லூரியின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரைத் தொடர்ந்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வேதிப் பொறியியல் துறை பேராசிரியருமான முனைவர் எம். சிதம்பரம் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டமளித்தார்.

 திண்டிவனம் கல்லூரி மாணவர்கள் 215 பேரும், விழுப்புரம் கல்லூரியிலிருந்து 219 பேரும் பட்டம் பெற்றனர். இவர்களில் விழுப்புரம், திண்டிவனம் கல்லூரிகளிலிருந்து அனைத்து துறைகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். விழுப்புரம் கல்லூரி முதல்வர் செந்தில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.