திருநாவலூரில், நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வலியுறுத்தி, மாணவர்கள் புதன்கிழமை கல்லூரி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு
பட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூரில் உள்ள அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கும் ஒரு வாரத்துக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கல்லூரி நிர்வாகம் சில மாணவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. மேலும்,ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட இரு மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியது.
இதனால் மனமுடைந்த மாணவர் ஆர்.பாஸ்கரன், கல்லூரி முன், ஆசிரியர்கள் முன்னிலையில் விஷம் குடித்துள்ளார். பண்ருட்டி மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்கக்கோரியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கல்லூரியின் முன் மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


