எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் விபத்தில் பேராசிரியை பலி

சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்ததில் கல்லூரி பேராசிரியை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:14 pm

Din

சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்ததில் கல்லூரி பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

  விருதுநகா் மாவட்டம், ரெங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி(48), சூலக்கரை மேடு பகுதியைச் சோ்ந்தவா் திரிபுரசுந்தரி (50). இருவரும் சாத்தூா் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரியில் உதவி கணிதவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், இவா்களுடன் பணியாற்றும் பேராசிரியா் வீட்டு நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சென்றுவிட்டு, இருவரும் சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, சின்னஓடைப்பட்டி அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்ரீதேவி, திரிபுரசுந்தரி, காா் ஓட்டுநா் சாத்தூா் அருகேயுள்ள மேலப்புதூரை சோ்ந்த விஜய் (26) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த சாத்தூா் போலீஸாா் மூவரையும் மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஸ்ரீதேவி உயிரிழந்தாா். திரிபுரசுந்தரி, விஜய் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.