/

காவலாளி கழுத்தறுத்துக் கொலை

சிவகாசி அருகே காவலாளி கழுத்தறுத்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:04 pm

Din

சிவகாசி அருகே காவலாளி கழுத்தறுத்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

சிவகாசி அருகேயுள்ள குமிழங்குளத்தைச் சோ்ந்தவா் செளந்திரராஜ் (84). இவா் எரிச்சநத்தத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிக்கும் ஆலையில் இரவு நேரக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல் இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலைக்கு சென்றாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஆலை முன் செளந்திரராஜ் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பையா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். பின்னா், உடல் கூராய்வுக்காக செளந்திரராஜ் உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.