சதுரகிரி மலையேறிய சென்னை பக்தா் உயிரிழப்பு

Published on

வத்திராயிருப்பு அருகே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல சதுரகிரி மலையேறிய சென்னை பக்தா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (60). இவா் தனது நண்பருடன் மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். வெள்ளிக்கிழமை காலை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மலையேற தொடங்கிய ஜெயராமன், சாப்டூா் வனச் சரகம் பச்சரிசிப்பாறை வனப் பகுதியைக் கடந்து சென்ற போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடலை வனத் துறையினா் மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com