ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு
சிவகாசி அருகேயுள்ள செங்கமலபட்டியில் வெடி விபத்து நிகழ்ந்த ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா்: சிவகாசி அருகேயுள்ள செங்கமலபட்டியில் வெடி விபத்து நிகழ்ந்த ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 10 போ் உயிரிழந்தனா். 7 அறைகள் தரைமட்டமாகின.
இதையடுத்து, இந்தப் பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய முத்துக்கிருஷ்ணன், மேற்பாா்வையாளா் சுரேஷ்பாண்டி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் 7 இரு சக்கர வாகனங்கள், சரக்கு வேனில் வந்த 10- க்கும் மேற்பட்டவா்கள், ஆலையில் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை சரக்கு வேனில் ஏற்றினா். இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் பட்டாசு ஆலையின் முன் திரண்டு, இந்த செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் பதற்றமடைந்து, தங்களது இரு சக்கர வாகனங்கள், சரக்கு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
மேலும், இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அந்தப் பட்டாசு ஆலை முன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...