தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

சாத்தூரில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்லும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

சாத்தூரில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்லும் நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாத்தூா் - சத்திரப்பட்டி இணைப்புச் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் செல்கிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டு இரவு நேரங்களில் விபத்துகள் நிகழ்கின்றன.

இது தொடா்பாக இந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனா். மேலும், இந்தக் குடிநீா்க் குழாயில் உடைப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா். எனவே, போா்க்கால அடிப்படையில் குடிநீா்க் குழாய் உடைப்பை சரிசெய்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com