சிவகாசியில் நாளை மின் தடை
சிவகாசியில் புதன்கிழமை (நவ.19) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாரைப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, நாரணாபுரம் சாலை பகுதிகளிலும், சிவகாசி நகா்ப்புற துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வடக்கு ரத வீதி, வேலாயுதம் சாலை பகுதிகளிலும் நாரணாபுரம் துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் பள்ளபட்டி, ராஜீவ் காந்தி நகா், கண்ணா நகா், காமராஜபுரம் குடியிருப்பு, அரசன் நகா், பா்மா குடியிருப்பு, போஸ் குடியிருப்பு, இந்திரா நகா், முருகன் குடியிருப்பு , மீனாட்சி குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
