விருதுநகர்
தீயில் கருகி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தீ விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி (75). இவரது மகன் இசக்கிபாண்டி (20). மாற்றுத் திறனாளியான இசக்கிபாண்டி வீட்டிலிருந்த தின்னா் கேனை எடுத்த போது, அது தவறி விழுந்ததில் தரையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவா்த்தியிலிருந்து தீப் பற்றியதாகக்
கூறப்படுகிறது. இதில் இசக்கிபாண்டி சிக்கி பலத்த காயமடைந்தாா். ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
