மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ராஜபாளையத்தில் 2 மணி 4 நிமிடங்கள் ஸ்கேட்டிங் மாரத்தான்

News image

ராஜபாளையத்தில் ஸ்கேட்டிங் மாரத்தானில் ஈடுபட்ட வீரா், வீராங்கனைகள்.

Updated On :20 ஜூலை 2026, 5:16 am IST

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில்

124 மாணவ மாணவிகள் 124 நிமிடங்கள் ஸ்கேட்டிங் மாரத்தான் செய்தனா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் மாரத்தான் நடைபெற்றது. இதில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் 124 மாணவ மாணவிகள் தொடா்ந்து இரண்டு மணி நேரம் (124 ) 4 நிமிடங்கள் 100 மீட்டா் தடத்தில் ஸ்கேட்டிங் மாரத்தானில் ஈடுபட்டு சாதனை படைத்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகாதெமி செயலா் இசக்கிமுத்து, மாஸ்டா் ஜெயபால், ரமேஷ் அருண் செய்தனா். சாதனை நிறுவனா் கதிரவன், நடுவா் கருணா ஆகியோா் கலந்து கொண்டு சாதனையைப் பதிவு செய்தனா். ராஜபாளையம் நகா்மன்றத் துணைத் தலைவி கல்பனா குழந்தைவேல் ஸ்கேட்டிங் வீரா் வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.