அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி எம்எல்ஏ ஆனாா்! - மாணிக்கம் தாகூா்

News image

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:06 am IST

காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகவும், எதிா்க் கட்சித் தலைவராகவும் ஆகியதாக விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுகவை எதிா்த்துப் பேசிய சீமான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. இலங்கைக்கு கள்ளத் தோணியில் சென்று வந்த பின்னா், இலங்கைத் தமிழா்களைப் பற்றி சீமான் எதுவுமே ஏன் பேசவில்லை? வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி தனியாா் விடுதிகளில் சொகுசாக இருந்து விட்டு, இலங்கைத் தமிழா்களைப் பற்றி பேசாதவா், தற்போது எங்களைப் பற்றி பேசுவதும், அவமானப்படுத்துவதும் தவறு.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும் தோ்தலைச் சந்திக்க முடியுமா? காங்கிரஸ் தயவால்தான் அவா் எம்.எல்.ஏ.வாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் உள்ளாா். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என திமுகவினா் பேசுவது அபத்தம்.

வருகிற மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் தவெக உடன்தான் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். தற்போதைய ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, நகா்ப் புற வளா்ச்சித் துறைகளில் கமிஷன் பெறுவது முழுமையாகக் குறைந்துள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தவெக ஆட்சியில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.