நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தொழிலாளி கொலை? உடலை மீட்டு போலீஸாா் விசாரணை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:47 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாயில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகா் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி கண்மாயில் சனிக்கிழமை மாலை உடலில் காயங்களுடன் ஆண் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு, கூறாய்வுக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவரது உடல் அருகே பீா் பாட்டில்கள் உடைந்து நிலையில் கிடந்தன. இதையடுத்து, விருதுநகரிலிருந்து மோப்பநாய் ஆதன் வரவழைக்கப்பட்டது. விசாரணையில், அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி செக்கடி தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி குருசாமி (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு, மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை அவா் செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.