திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வீடு புகுந்து பணம் திருட்டு

சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:24 pm

சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள நீராவிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (41). இவா் தற்காலிகமாக சூலக்கரையில் தங்கியுள்ளாா். வாரம் ஒருமுறை மட்டும் நீராவிப்பட்டிக்கு வந்து செல்வாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபரைத் தேடி வருகின்றனா்.