சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:09 pm

சிவகாசியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொத்துமரத்து ஊருணி கரைப் பகுதியில் ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரது பையை வாங்கி சோதனை செய்த போது, அதில் 28 மதுப் புட்டிகள் இருந்ததும், அனுமதியின்றி இவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆமத்தூா் அருகேயுள்ள சங்குரெட்டியபட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முனியசாமி (46) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.