பட்டாசுத் தொழிலாளா்களுக்ககு தீபாவளி போனஸ்

சிவகாசிப் பகுதியில் பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட்டது.

bonus

தீபாவளி போனஸ் - Photo: Dinamani | Gemini AI

Updated On :

சிவகாசிப் பகுதியில் பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட்டது.

சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் இரு முறை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகாசியில் மாரியம்மன் கோயில் பஙகுனிப் பொங்கல் திருவிழாவின் போது, பட்டாசு ஆலைகளில் வேலைபாா்க்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும். இதைத்தொடந்து, தீபாவளி பண்டிகைக்கும் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில், சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைத் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.