
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய பூமாலை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவில் சனிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்.
திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவில் சனிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மதுரையில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதா் சித்திரைத் தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோத்ஸவம் ஆகியவற்றின் போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும்.
இதன்படி, இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவில் மூலவா் வெங்கடேசப் பெருமாளும், உத்ஸவா் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாலை தயாா் செய்யப்பட்டு, வியாழக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு, ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் சனிக்கிழமை (செப். 19) மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அன்று மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டாள் சூடிய மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







