இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விளையாட்டு: கிரிக்கெட் 'கில்லி'களை உருவாக்கும் குரு!

சென்னையில் சத்தமில்லாமல் கிரிக்கெட் சாதனை வீரர்களை உருவாக்கி வருகிறார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன். நேர்த்தியான பயிற்சி, சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள், பேட்டிங் டெக்னிக்குகள், பெüலிங் பயிற்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

வா.சங்கர்

சென்னையில் சத்தமில்லாமல் கிரிக்கெட் சாதனை வீரர்களை உருவாக்கி வருகிறார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

நேர்த்தியான பயிற்சி, சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள், பேட்டிங் டெக்னிக்குகள், பெüலிங் பயிற்சி மூலம் திறமையான கிரிக்கெட் 'கில்லி'களை உருவாக்கி வருகிறார் ஹாரிங்டன். சென்னை பெசன்ட் நகரிலுள்ள இவரது கிரிக்கெட் பயிற்சி அகாதெமி திறம்பட இயங்கி வருகிறது.

தினேஷ் கார்த்திக், சடகோபன் ரமேஷ் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் ஹாரிங்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபில் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் கலக்கி வருபவர் தினேஷ் கார்த்திக் என்பது நினைவிருக்கலாம்.

பெசன்ட் நகர் கிரிக்கெட் அகாதெமியில் ஹாரிங்டனை சந்தித்தோம்.

இதுவரை எத்தனை கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்திருப்பீர்கள்?

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்திருக்கிறேன். இதற்கு கணக்கெல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. திறமையான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பெüலிங் பயிற்சி அளிப்பதா அல்லது பேட்டிங் பயிற்சி அளிப்பதா அல்லது இரண்டு பயிற்சியுமே அளித்து ஆல்-ரவுண்டராக மாற்றுவதா என்பதைத்தான் முடிவு செய்வேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் இன்று மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவது எனக்குப் பெருமை.

பயிற்சி நேரம்...?

தினமும் காலை 3 மணி நேரம் மாலையில் 3 மணி நேரம் என கடுமையான பயிற்சி. திட்டமிடப்பட்ட உணவு முறைகள். இடைவிடாத உடற்பயிற்சி என வீரர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிப்பதில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம்.

பெசன்ட் நகர் அகாதெமியில் தற்போது 30-க்கும் மேற்பட்ட இளம் வீரர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறேன்.

அதுமட்டுமல்லாது சென்னையை அடுத்து அமைந்துள்ள செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இங்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போதுள்ள மாணவர்களில் சர்வதேச போட்டிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் உள்ளனரா?

தற்போதுள்ள மாணவர்களில் கோகுல், பிரவீண் யாதவ் போன்ற வீரர்கள் சர்வதேச வீரர்களாக வர வாய்ப்பிருக்கிறது.

கோகுல் சிறந்த ஆஃப் ஸ்பின்னர். செயின்ஸ் ஜான்ஸ் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். ஜெய் கிஷண் பள்ளி கிரிக்கெட் போட்டியில் சிறந்த முறையில் பந்துவீசி விக்கெட்டுகளைச் சாய்த்தார். சிறந்த பெüலர் விருதையும் பெற்றார்.

மற்றொரு வீரரான பிரவீண் யாதவும் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். இவரும் ஜெய் கிஷண் பள்ளி கிரிக்கெட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி விருது பெற்றார்.

இவர்கள் உள்ளிட்ட 25 பேர் லண்டனில் பயிற்சி பெற செல்லவுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹேமங் பதானி தலைமையில் லண்டனில் இவர்களுக்கு 21 நாள் கடும் பயிற்சி நடைபெறவுள்ளது.

அவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் வி.வி. குமார், சரத் உள்ளிட்டோரும் பயிற்சி அளிக்கவுள்ளனர். எனது மேற்பார்வையில் பயிற்சி நடைபெறும். விரைவில் அவர்கள் மாநில அணிக்குத் தேர்வு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்கான வசதிகள்?

செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் சிறந்த வகையிலான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பயின்ற மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர். இங்கு 3 வலைப்பயிற்சி மைதானங்கள் உள்ளன. மேலும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பெüலிங் மெஷின்களும் உள்ளன. இதனால் தரமான கிரிக்கெட் வீரர்கள் இங்கிருந்து உருவாவது நிச்சயம்.

உங்களுடைய பயிற்சி குறித்து...?

1991-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இளமையிலேயே கிரிக்கெட் ஆர்வம் உள்ள சிறார்களைக் கண்டறிந்து அவர்களை திறமைமிக்க வீரர்களாக மாற்றி வருகிறேன்.

91-ல் பெசன்ட் நகர் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில், பள்ளியின் நிறுவனர் ஆர். கிஷோர்குமார் உதவியால் சேர்ந்தேன்.

அதன் பின்னர் பல அகாதெமிகளில் வீரர்களுக்கு பயிற்சி அளித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான வீரர்கள் இன்று மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

எதிர்காலக் கனவு?

அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான சர்வதேச வீரர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன். தமிழகத்திலிருந்து தேசிய அணியில் பல வீரர்கள் இடம்பெறவேண்டும் என்பது கனவு.

அந்தக் கனவை நனவாக்க பெருமுயற்சி செய்து வருகிறேன். என்னிடம் பயிலும் மாணவர்களும் எனது எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றனர்.

செயின்ட் ஜான்ஸ் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி நிறுவனர் ஆர்.கிஷோர் குமார் செய்துகொடுத்துள்ளார். தரம்வாய்ந்த கிரிக்கெட் மைதானம், வலைப்பயிற்சி செய்ய வசதி, தரமான கிரிக்கெட் உபகரணங்கள், பெüலிங் மெஷின் என்று ஏராளமானவற்றைச் செய்து தந்துள்ளார்.

பெüலிங் மெஷினில் நேரம் மற்றும் வேகத்தை செட் செய்துவிட்டு விளையாடும்போது கிரிக்கெட் வீரர்களின் திறமை மேம்படும். பந்து ஒரே வேகத்தில் வந்தாலும் அளவு மாறுபடும். பெüன்ஸர், புல் டாஸ், யார்க்கர் என பல அளவுகளில் வரும்போது வீரர்களின் திறமை மேம்படும்.

அதில் ஆடி பழகும்போது, வீரர்கள் எளிதாக போட்டிகளில் ஜொலிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் வீரர்களின் ஆட்டத்தைக் கண்காணிக்க புதிதாக வெப் கேமரா, விடியோ அனாலிசிஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

அடிக்கடி கிரிக்கெட் கருத்தரங்குகளும் நடத்தி திறமையான வீரர்களை உருவாக்குவதை ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.