விளையாட்டு: வெற்றி மேல வெற்றிதான்!
வெற்றி மேல வெற்றிதான் எங்கள் கையில...கால்பந்தில் கோப்பைதான் எங்கள் பையிலே...' என்ற வெற்றி முழக்கம் சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேட்டது. என்னவென்று நுழைந்தபோது தொடர்ந்து 3 வெற்றிகளைக் குவித்து


வெ ற்றி மேல வெற்றிதான் எங்கள் கையில...கால்பந்தில் கோப்பைதான் எங்கள் பையிலே...' என்ற வெற்றி முழக்கம் சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேட்டது. என்னவென்று நுழைந்தபோது தொடர்ந்து 3 வெற்றிகளைக் குவித்து சென்னை கஸ்டம்ஸ் கால்பந்து அணி வீறுநடை போட்டு வரும் விஷயம் தெரியவந்தது.
சி ட்டி லீக் கால்பந்து, இளையாங்குடியில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் மாநில அளவிலானரேங்க்கிங் கால்பந்து, காயல்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய அழைப்பு கால்பந்துப் போட்டிகளில் சென்னை கஸ்டம்ஸ் அணி தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று தமிழக அளவில் அசைக்க முடியாத அணியாக முன்னேறி வருகிறது. இதன் ரகசியம் குறித்து நம்முடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சென்னை கஸ்டம்ஸ் விளையாட்டு அதிகாரி தியாகராஜன்.
உங்கள் அணியின் வெற்றியின் ரகசியம் என்ன?
சென்னை கஸ்டம்ஸில் விளையாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். வாலிபால், கூடைப்பந்து அணிகளில் வெல்ல முடியாத அணியாக சென்னை கஸ்டம்ஸ் அணி முன்னேறி வருகிறது. அதைப் போலவே கால்பந்து அணிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அணி வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.
தேர்வுப் போட்டிகள் நடத்தி சென்னை கஸ்டம்ஸ் அணியை சிறப்பான அணியாக உருவாக்கியுள்ளோம்.
போட்டிக்கு முன்னதாக இடைவிடாத பயிற்சி, வீரர்களுக்குத் தேவையான கால்பந்தாட்ட நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறோம். கால்பந்து வீரர்களுக்குத் தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிகளைக் குவித்து வருகிறது.
தற்போது தொடர்ந்து 3 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனையை சென்னை கஸ்டம்ஸ் கால்பந்து அணி பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் எங்களது அணியின் வெற்றி தொடரும்.
கஸ்டம்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பற்றி கூறுங்கள்?
சென்னை கஸ்டம்ஸ் அணிக்கு கால்பந்து பயிற்சியாளராக கிராண்ட் துரைப்பாண்டியன் இருக்கிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியவர். இந்திய அணியின் கால்பந்து பயிற்சி முகாம்களில் பங்கேற்றார். தற்போது கஸ்டம்ஸில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ளார்.
இவருடைய வழிநடத்தலில் அணி மேலும் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
கஸ்டம்ஸ் அணியிலிருந்து தமிழக அணிக்காக வீரர்கள் விளையாடி வருகின்றனரா?
ஏற்கெனவே ஏராளமான வீரர்கள் தமிழக அணிக்காக விளையாடியுள்ளனர். ரமேஷ் பார்த்திபன், சதீஷ் போன்ற வீரர்கள் கஸ்டம்ஸிலிருந்து தமிழக அணிக்குச் சென்றவர்கள்தான்.
விரைவில் நடைபெறவுள்ள சந்தோஷ் டிராபி கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணியில் கஸ்டம்ஸ் வீரர்கள் 7 பேர் இடம்பிடித்துள்ளனர். இதுவே கஸ்டம்ஸ் அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விருதாகும். இதன்மூலம் திறமையான வீரர்களை கஸ்டம்ஸ் உருவாக்கி வருகிறது என்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.
அணியின் எதிர்காலத் திட்டம்?
தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவதுதான் எங்களது ஒரே நோக்கம். விரைவில் நடைபெறவிருக்கும் பெடரேஷன் கோப்பையைக் கைப்பற்றுவதற்காக வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெடரேஷன் கோப்பைக் கனவை நனவாக்குவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...