ஆப்பிள் தேசம்- 3: வாத்து மேதைகள்!
கொலம்பஸ் நகர் அருகில் உள்ள ஒர்த்திங்டன் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களைப் பார்ப்பது என்பது முன்கூட்டியே அருளும் நானும் முடிவு செய்திருந்த திட்டம். அருள் பகுதி நேரத் தொண்டர் ஆசிரியராக ஒர்த்திங்டன் பள்ளி


கொ லம்பஸ் நகர் அருகில் உள்ள ஒர்த்திங்டன் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களைப் பார்ப்பது என்பது முன்கூட்டியே அருளும் நானும் முடிவு செய்திருந்த திட்டம். அருள் பகுதி நேரத் தொண்டர் ஆசிரியராக ஒர்த்திங்டன் பள்ளியில் பணியாற்றியிருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் அருளின் நண்பரான ஆரம்பப் பள்ளியின் முதல்வர் டான் கிரார்டுக்குக் கடிதம் எழுதி அந்தப் பள்ளியின் செயல்பாட்டை நேரில் காண அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் இம்முறை நான் சென்ற சமயம் கிரார்ட் வேறொரு பள்ளியில் உடற்பயிற்சி இயக்குநர் பொறுப்புக்கு மாறியிருந்தார். பள்ளிகளும் விடுமுறையில் இருந்தன. எனினும் பள்ளியைச் சுற்றிப் பார்க்கவும் அங்கிருந்த ஊழியர்களைச் சந்திக்கவும் முடிந்தது. ஒர்த்திங்டன் பகுதியிலேயே இருந்த இன்னொரு உயர்நிலைப் பள்ளியையும் அருளுடன் சென்று சுற்றிப் பார்த்தேன்.
அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகள் பப்ளிக் ஸ்கூல் எனப்படும் அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. எல்லாப் பள்ளிகளுக்குமான விதிகள் பொதுவானவை. புரசைவாக்கத்தில் குடியிருந்துகொண்டு அண்ணா நகர் பள்ளியில் குழந்தையைச் சேர்க்கமுடியாது என்பது அடிப்படை விதி. அந்தந்த வட்டார மக்கள் அந்தந்த வட்டாரப் பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும். வீடு வாடகைக்கு எடுத்து குடியேறியதும், வாடகை ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றால் குழந்தையைச் சேர்த்துக் கொண்டாக வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு ஸ்கூல் பஸ்சில்தான் செல்ல வேண்டும். மிக அருகில் இருந்து சைக்கிளிலோ, நடந்தோ செல்ல முடிவு செய்தால், அந்த மாணவருக்கான போக்குவரத்து செலவாக அரசு ஒதுக்கிய தொகையை, பெற்றோருக்குப் பள்ளி கொடுக்க வேண்டும் என்றுகூட ஒரு விதி இருப்பதாக நியூஜெர்சியில் நான் சந்தித்த பத்மா அரவிந்த் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கல்வித் திட்டங்கள் வட்டாரமயமாக்கப்பட்டுவிட்டன. மாநில அளவில் இல்லாமல், மாவட்டம் என்று சொல்லத்தக்க கவுண்ட்டி அளவில் கல்வி மாவட்டங்கள் உள்ளன. அந்தந்த கவுண்ட்டியில் என்ன பாடத்திட்டம் என்பதை அந்த வட்டார நிர்வாகமே தீர்மானிக்கிறது. சில பொதுத் திறன்கள் மட்டும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. நாம் இன்னமும் கல்வி மாநில அரசுக்குரியதா, மத்திய அரசுக்குரியதா, பொதுப் பிரிவில் இருப்பது சரியா தவறா, மெட்ரிக்கா, ஸ்டேட்டா, சி.பி.எஸ்.ஈ.யா என்ற விவாதத்திலேயே இருக்கிறோம். அமெரிக்காவில் அதிகாரப் பரவலாக்கம் என்பது நன்றாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை உள்ளூர் பத்திரிகைகள் பிரதிபலித்தன. நான் சென்றிருந்த சமயம் உள்ளூர் பத்திரிகைகளில் பிரின்சிபல் டான் கிரார்டின் பேட்டி வெளியாகியிருந்தது. பத்தாண்டுகள் ஒரு பள்ளியில் முதல்வராக அவர் பணியாற்றிய அனுபவம், புதிய பொறுப்பில் என்ன செய்யப் போகிறார், அடுத்த முதல்வர் பற்றியெல்லாம் விரிவாக இருந்தது. அங்கே உள்ளூர் கம்யூனிட்டி செய்தித்தாள் என்பது நிஜமாகவே கம்யூனிட்டி செய்தித்தாள்தான். அதில் வட்டாரப் பள்ளிகளின் செய்திகள், பழைய மாணவர் சந்திப்புகள், மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகள், உள்ளூர் நூலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், புதிதாக என்னென்ன புத்தகங்கள் நூலகத்துக்கு வந்திருக்கின்றன என்ற தகவல்கள், வட்டாரக் காவல் துறை சம்பந்தப்பட்ட செய்திகள், முனிசிபல் நிர்வாக செய்திகள் விவரமாக வெளியிடப்படுகின்றன. நம் ஊரில் கம்யூனிட்டி செய்தித்தாள் என்ற பெயரில் உள்ளூர் கடைகளின் விளம்பரங்களை 80 சதவிகிதம் அச்சிட்டுவிட்டு இடையிடையே ஒப்புக்கு சில செய்திகளை வெளியிடும் பாணியில் அவை இல்லை.
எந்த அளவுக்குக் கல்வித்திட்டம் வட்டாரமயப்படுத்தப்பட்டிருக்கிறது, பாடத்திட்டத்தில் பள்ளிக்குத் தன்னாட்சி இருக்கிறது என்பதன் அடையாளமாக கம்யூனிட்டி செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ஒர்த்திங்டன் எஸ்டேட் எலிமென்ட்டரிப் பள்ளியில் கல்வியாண்டு முடிந்து குழந்தைகள் கடைசி நாள் பள்ளிக்கு வந்து சென்றபிறகு, ஓர் ஆசிரியைக்கு மட்டும் ஒரு கூடுதல் பொறுப்பு இருந்தது. பள்ளியிலிருந்து 11 வாத்துக்குஞ்சுகளை சில கிலோமீட்டர் தூரம் நடத்திச் சென்று ஆற்றங்கரையில் விடுவதுதான் அந்த வேலை.
ஒவ்வோராண்டும் ஆரம்பத்தில் பள்ளிக்கு ஒரு வாத்தை அழைத்து வருகிறார்கள். அந்த வாத்து பள்ளியிலேயே குஞ்சு பொரிக்கிறது. வாத்துகள் கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் இருக்கும் குளத்திலும் புல்வெளியிலும் வாழ்கின்றன. ஒரு வாத்தின் வாழ்க்கையை ஆரம்பம் முதல் கடைசி வரை கூடவே இருந்து நேரில் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்வதுதான் இதன் நோக்கம். ஆண்டு இறுதியில் வாத்துக் குஞ்சுகள் ஆற்றோரம் விடப்படுகின்றன. இப்படிப் பாடத் திட்டத்தில் பல புதுமைகளைப் புகுத்திக் கொள்ளும் சுதந்திரம் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் இருக்கிறது.
ஒவ்வொரு வகுப்பறையும், பள்ளி வராந்தாக்களும், தோட்டமும் படிப்பதற்கான சூழலைச் சிறப்பாக ஏற்படுத்துகின்றன. வகுப்பறையின் சாவி வகுப்பாசிரியர் பொறுப்பில் இருக்கிறது. பள்ளி முடிந்ததும் பூட்டி அவரே சாவியை எடுத்துப் போய்விடுகிறார். ஆண்டு விடுமுறை நாட்கள் உண்மையில் ஆசிரியர்களுக்கு விடுமுறையில்லை. அடுத்த ஆண்டு ஒவ்வொரு வாரமும் என்னென்ன பாடங்களை எப்படி கற்பிக்கப்போகிறார்கள் என்று அவர்கள் திட்டம் வகுக்க வேண்டும். அதை பிரின்சிபாலிடம் காட்டி விவாதித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் தந்தபிறகு ஆசிரியர் முழு சுதந்திரத்துடன் தன் கற்பித்தல் பணியை நடத்தலாம்.
நான் சென்று பார்த்த உயர்நிலைப்பள்ளியில் மூன்று நீச்சல் குளங்கள் இருந்தன. இரண்டு உள் விளையாட்டரங்கங்கள். ஒரு பெரிய நாடக அரங்கம். இதில் வருடந்தோறும் பள்ளி மாணவர்கள் நடத்தும் நாடகத்துக்குப் பெருமளவில் பொதுமக்கள் டிக்கெட் கொடுத்துப் பார்க்க வருகிறார்கள். இந்த உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் அளவு வசதிகள் நம் ஊரில் கல்லூரிகளில்கூட இல்லை என்று சொல்லலாம். இத்தனைக்கும் ஒர்த்திங்டன் என்பது பெரு நகரம் அல்ல. புற நகர்ப் பகுதி. மொத்த மக்கள் தொகையே 15 ஆயிரம்தான்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் மேலே என்ன படிப்பது என்பது பற்றி நம் நாட்டில் குடும்பமே கூடி விவாதித்தோ, விவாதிக்காமலோ முடிவு செய்து சிறுவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கக் கல்வி முறையில் இது சாத்தியம் இல்லை. பள்ளி இறுதிக்கட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் ஆசிரியர் கவுன்செலராக நியமிக்கப்படுகிறார். அந்த கவுன்செலர், மாணவரின் படிப்பைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். மாணவரின் திறமை, விருப்பு வெறுப்புகள், ஆர்வங்கள், உழைக்கும் தன்மை எல்லாவற்றையும் கவனித்து மேலே எந்தப் படிப்பை மேற்கொள்வது நல்லது என்று அவர் பரிந்துரைக்கிறார். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்பதைவிட, கவுன்செலர் சொல்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அருளுடன் ஒர்த்திங்டனில் இருக்கும் நூலகத்துக்கும் நான் சென்றேன். ஒர்த்திங்டனில் மட்டும் மூன்று நூலகங்கள் இருக்கின்றன. கொலம்பஸ் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சம். மொத்த நூலகங்கள் 26. நூலகங்களில் உறுப்பினராவதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. உள்ளூர்வாசி என்பதற்கான ஆவணம் இருந்தால்போதும். ஒருமுறை 50 புத்தகங்கள் எடுக்கலாம். பத்து பட டிவிடிகள் எடுக்கலாம். 30 ஆடியோ கேசட்டுகள் எடுக்கலாம். பத்து சி.டி.கள் எடுக்கலாம். ஐந்து ஈ புக் அல்லது ஆடியோபுக் எடுக்கலாம். படங்களை ஐந்து நாட்களில் திருப்பவேண்டும். புத்தகங்களை 28 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். தாமதமாகத் திருப்பினால் மட்டுமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...