இந்த நடனத்திற்காக, நேரு இளையோர் மையம் சார்பில் 1998-ல் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் கலைவிழாவில் முதல் பரிசும்,1999-ல் லக்னோவில் நடைபெற்ற கலைவிழாவில் இரண்டாம் பரிசும் பெற்றேன். மாநில அளவில் 1997-ல் நாடகம், வில்லுப் பாட்டு, ரங்கோலி ஆகியவற்றில் முதல் பரிசுகளைப் பெற்றுள்ளேன். கிராமிய நடனப் போட்டியில், 1998-ல் சேலத்தில் நடந்த போட்டியில் முதல் பரிசும்,1999ல் கோவையில் நடந்த போட்டியில் முதல் பரிசும் பெற்றேன். 1998ல் மாவட்ட அளவில் சிறந்த இளையோர் விருதும்,2009-ல் சிறந்த கிராமிய நடனக் கலைஞர் விருதும் பெற்றுள்ளேன்.