கப்பலில் ஏறுவதற்கு முன்னால், பயணியிடம் 29 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தப் பதில்கள் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட்டன. பெயர், வயது, பால், மொழி, இனம், மண நிலை, உடல் நலம், அறிவு முதிர்ச்சி, எழுதப் படிக்கத் தெரியுமா,போன்றவை தவிர போகும் ஊரில் தெரிந்தவர் யார், அவர் முகவரி முதலியனவும் கேட்கப்பட்டன. பல தார மணத்தை ஆதரிப்பவரா, அரசியலில் அராஜகக் கொள்கை உடையவரா என்றெல்லாம்கூட விசாரித்தார்கள். கையில் குறைந்தபட்சம் முப்பது டாலராவது இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகளும் கப்பலில் ஏறும் முன்பே செய்யப்பட்டன, தடுப்பூசிகள் கட்டாயமாகப் போடப்பட்டன.