இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிரி...சிரி...

'' டாக்டர் சைகையிலேயே ட்ரீட்மெண்ட் செய்தாரா?'''' ஊமை காயமாம்''

News image
Updated On :18 டிசம்பர் 2022, 12:30 am

DIN

'' டாக்டர் சைகையிலேயே ட்ரீட்மெண்ட் செய்தாரா?''
'' ஊமை காயமாம்''

- மஞ்சுதேவன்,
பெங்களூரு.

''புதுசா திருமணமான அந்த ஜோடிக்கு ஏன் ஒரே மூச்சு வாங்குது?''
''அவங்கதான் ஓடிப் போய் கல்யாணம் செய்துகிட்டாங்க! அதான்''

-தீபிகா சாரதி,
சென்னை.

''டாக்டர். நீங்க என்னிடம் வாங்கிய கடனை  சீக்கிரமா தாங்க!''
''ஏன்னாச்சு? இப்படி கேட்க மாட்டீங்க?''
''நீங்க மனோதத்துவ டாக்டராச்சா! உங்களைப் பார்த்துட்டு போனா எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்குறாங்க!''

-கு..அருணாசலம்,
ன்காசி.

''எதிர்வீட்டுக்காரர் அவரு மனைவிக்கு வைரதோடு வாங்கித் தந்தாராம். நீங்க வாங்கித் தருவீங்களா..?''
''வேண்டாம். டியர். வீணா அவங்க வீட்டுல குழப்பம் வந்துடும்.''

-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.

''உன் காதலன் என்னடி சொல்லுறான்?''
''அவன் கிடக்கிறான் விடுடி. எப்பப் பாரு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு நச்சரிக்கிறான்டி!''

-எம்.அசோக்ராஜா,
அரவக்கறிச்சிப்பட்டி.

''மாமியார் வீட்டுலேயே ரொம்ப நாளாக  இருக்கிறது வெறுத்துப் போச்சு சார்''
''அதுக்கு''
''ஒரு சேஞ்சுக்கு 10 நாள் தங்கிட்டு வரலாமுன்னு மச்சினன் வீட்டுக்கு போகப் போறேன்''

-கி.வாசுதேவன்,
தஞ்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.