கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிரி...சிரி...

"வேலைக்காரி என்ன உன்னை "தங்கச்சி',ன்னு கூப்பிடறா...?''""நான் தான்  "அக்கா'ன்னு கூப்பிடக்கூடாதுன்னு கண்டிச்சிருக்கேன்!''

News image
Updated On :5 ஜூன் 2022, 1:01 pm

DIN

" "வேலைக்காரி என்ன உன்னை "தங்கச்சி',ன்னு கூப்பிடறா...?''
""நான் தான் "அக்கா'ன்னு கூப்பிடக்கூடாதுன்னு கண்டிச்சிருக்கேன்!''

-வி. ரேவதி, தஞ்சை.

காவலர்: ""இப்ப கைது பண்ணச் சொல்லி நீயே வந்திட்டியே..''
ரௌடி: ""என்ன காட்டி கொடுக்கற வங்களுக்கு பத்து லட்சம் பரிசுன்னு'' நோட்டீஸ் பாத்தேன். அதான் நானே வாங்க வந்துட்டேன்...''

- ப. நரசிம்மன், திருச்சி.

""என் மனைவி ஆபிசிஸ்ல திட்ட அதிகாரியாக வேலை பார்க்கிறார்''
""சரி.. அதற்கென்ன..?''
""வீட்டிலும் திட்டிக் கொண்டே இருக்கிறார்''

-டி.கே.சிவக்குமார், கோவை.

""ஆபரேஷனுக்கு செலவாகும் பராவாயில்லையா?''
""பரவாயில்லை. டாக்டர்... "கடன்' தானே சொல்லிட்டு போகப் போறேன்?

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

""நான் ஆறு வயசுல தைச்ச சட்டையை இப்ப போட்டுனு இருக்கேன்''
""ஆச்சரியமா இருக்குதே எப்படி ?''
:அப்ப சட்டையை ரொம்ப லூசா தைச்சுட்டாங்க !''

-தீபிகா சாரதி .சென்னை -5.

""இப்போ ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பிச்சை எடுக்க வர்றியே ஏன்? ''
"" கடவுள் புண்ணியத்தில் புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கிட்டேன் தாயீ!''

-நாஞ்சில் சு. நாகராஜன் , பறக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.