தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சிரி... சிரி...

'என்னடி உன் வீட்டுக்கு வந்த திருடன் லெட்டர் எழுதி வெச்சிட்டு போனானாமே..?''

News image

சித்தரிக்கப்பட்டது

Updated On :11 ஆகஸ்ட் 2024, 12:00 am IST

'என்னடி உன் வீட்டுக்கு வந்த திருடன் லெட்டர் எழுதி வெச்சிட்டு போனானாமே..?''

'ஆமாம்டி. சாப்பாடு சரியில்லை.. அடுத்த முறை வரும்போது நல்லா செஞ்சு வையுங்கன்னு இருந்திச்சி..''

அ.செந்தில்குமார், சூலூர்.



'ஆடி தள்ளுபடிக்கு என்ன செய்யப் போறே?''

'இருக்கிற காசை டிரஸ்ஸா மாத்தப் போறேன்டி...''

ஏ.நாகராஜன், பம்மல்.



'வாயைத் திறந்து ஏதாவது பேசு...''

'ஏன் அத்தே...''

'அதை வச்சு சண்டை ஆரம்பிக்கதான்!''

-பர்வதவர்த்தினி, பம்மல்,



'என் புருஷன் கூட சண்டை போடவே பயமா இருக்குடி...''

'ஏன் அடிச்சிடுவாரா?''

'இல்லைடி சமையலில் உப்பை அள்ளிப் போட்டு பழிவாங்குவாரு..''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'என் வீட்டு வேலைக்காரி என் மனைவியை நல்லா ஏமாத்தறா?''

''எப்படி?''

'ஊர்வம்பை சொல்றேன்னு சொல்லிட்டு, நைஸா மெகா சீரியல் கதைங்களை சொல்லிடறா?''



'என் மனைவிக்கு இப்போ ஞாபக மறதி வந்திடுச்சி...''

'எப்படி...?''

'எங்க வீட்டு வம்பையே வேலைக்காரி சொல்றா.. அதை என் மனைவி உட்கார்ந்து கேக்குறாளே...''

வி.சாரதி டேச்சு, சென்னை.



'உன் புருஷன் குதிரை ரேஸ் ஜாக்கியாமே கலா...''

'ஆமாம்டி..''

'அதான் யாரைப் பார்த்தாலும் கமான்.. கமான்.. சொல்றாரு...?''



' உங்க பையன் உன்னை திட்டிக்கிட்டே இருக்கானாமே.?''

'எதையும் கற்றுத் தராம செல்லமா வளர்த்து பெண்டாட்டிக்கிட்டேயும் மாமியார்கிட்டேயும் திட்டு வாங்க வைச்சிட்டேனாம்...''



'என் புருஷன் வாங்குற சம்பளத்தைவிட மாமனாருக்கு பென்ஷன் அதிகம் தெரியுமா?''

'மாமனாரை நீ முதியோர் இல்லத்துக்கு அனுப்பாம இருக்கும்போதே தெரிஞ்சுகிட்டேன்...''



'முனியம்மா நல்லாதானே வேலை செஞ்சிட்டு இருந்தா.. அவளை ஏன்டி வேலையை விட்டு நிறுத்தினே...''

'யார் வீட்டு வம்பையும் சொல்ல மாட்டேங்குறாளே...''



'என்னங்க.. உங்க 12 சென்ட் இடத்துல வேலைக்காரிக்கு 2 சென்ட் இடம் கொடுத்து வீடு கட்ட சொன்னீங்களாமே...''

'நீதானே அதிகம் இடம் தர வேண்டாமுன்னு சொன்னே. அதான் ரெண்டு சென்ட்டுல கட்டிக்கச் சொன்னேன்...''



'நான் ஊருக்குப் போயிருந்தப்போ நீங்க வேலைக்காரியை சினிமாவுக்கு அழைச்சிட்டு போனீங்களா?''

'அவதான்பா ரெண்டு பேருக்கும் டிக்கெட் எடுத்தா?''

' இது மட்டும் பொய்யா இருக்கட்டும். பிறகு நான் வெச்சிக்குறேன்...''

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.