கர்நாடகத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் காளி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது 'கார்வார்'. உள்ளுர் மக்களோ 'காட்வாடா' என அழைக்கின்றனர்.கொங்கணியில் 'காட்' என்றால் 'கடைசி' . 'வாடா' என்றால் 'வார்டு'.
இதனை எளிதில் 'கடைசி சுற்றுப்புறம்' எனலாம். இங்குள்ள துறைமுகத்தில் ஒருகாலத்தில் கறுப்பு மிளகு,ஏலக்காய் மற்றும் மஸ்லீன் துணிகள் ஏற்றுமதியாயின. இதற்கு 'கர்நாடகத்தின் காஷ்மீர்' எனவும் செல்லப் பெயருண்டு.
ஸ்கந்த புராணத்தில் சஹ்யாத்ரி கண்டத்தில் இந்த ஊர் கோவபுரியின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அருகில் மாங்க்ரோவ் காடுகள் கொண்ட தீவுகள் உள்ளன.
ஜூன்செப்டம்பர் மழைக் காலம். இங்கு பினாகா பீச், தேவ்பாக் பீச், கார்வார் பீச் மஜாலி பீச் ராக் தோட்டம் மற்றும் லைட் ஹவுஸ் என பல உள்ளன.
தேவ்பாக் பீச் அரபிக்கடலுக்கும் காளி நதிக்கும் இடையில் ஒரு குறுகிய நிலப் பரப்பில் அமைந்துள்ளது.இங்கு சூரிய உதயத்தில் டால்பின்களைப் பார்க்கலாம். படகு சவாரி செய்யலாம்.நீர் அமைதியானது.அதனால் நீந்தலாம்.
ரவீந்தரநாத் தாகூர் ஒரு காலத்தில் இங்கு வந்து தங்கி எழுதியதால், 'தாகூர் கடற்கரை' என்கின்றனர். இன்று தாகூர் பீச். மாலையில் உள்ளுர் குடும்பங்கள் வந்து கடல் காற்றை அனுபவித்துச் செல்கின்றனர்.
சதாசிவ காட் கிராமத்துக்கு அருகில் உள்ள காளி நதியின் உப்பங்கழிகளில் கயாக்கிங் செய்யலாம். சதுப்பு நில வனப்
பகுதிகள் வழியாகச் செல்லும் குறுகிய ஓடைகளில் துடுப்பு போடுவது ஒரு ரகசிய மரகத உலகிற்குள் பயணிப்பது போல் இருக்கும்.இங்கு கிங்பிஷர் எக்ரெட்ஸ் மற்றும் டால்பின் போன்றவற்றை உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காணலாம். கயாக்கிங் காலையில், அனுபவிக்கலாம். குரூம்காட் தீவில் மிதமான பாறை மீது ஒரு நரசிம்மர் கோயில் உள்ளது.
கார்வாரில் கடற்படை தளம் ஒன்றும் உள்ளது. எஸ் எஸ் சாப்பல் போர்கப்பல் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. கடல் உணவுகள் இங்கு பிரபலம்.
வானிலை இனிமையாக இருப்பதால் பயணத்திற்கு அக்டோபர்மார்ச் சிறந்த நேரம்.கோவா செல்பவர்கள் இதனையும் சேர்த்து அனுபவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.