நடிகர் அஜித்குமாரின் அணி 24 ஹெச் துபை சீரிஸ் ரேஸிங்கில் அண்மையில் கலந்துகொண்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவரது அணியின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது. அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட், அதிலிருந்து பத்திரமாக வெளியேறினார்.
இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது...
'எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் கார் ஓட்டுவதையும், எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதையும் பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்குச் சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களைப் பெருமைப்படுத்தும்' என்று கூறியுள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.