அரசுப் பணிக்கு ஆங்கிலமும் தேவை!
நீங்கள் அரசுப் பணியை விரும்பும் இளைஞரா? ஆம்...என்றால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் அமர்ந்தால் மட்டும் போதாது. பிறகு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா?


நீங்கள் அரசுப் பணியை விரும்பும் இளைஞரா? ஆம்...என்றால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் அமர்ந்தால் மட்டும் போதாது. பிறகு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா?
இதோ உங்களுக்காக சில தகவல்கள்...
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் 2 லட்சம் வரை காலிப் பணியிடங்கள் இருப்பதாக தகவல். இத்தனையையும் ஒரே நாளிலோ, ஒரே வருடத்திலோ நிரப்பி விட்டால் நமக்கும் அரசுப் பணி கிடைக்கும் என நினைக்காதீர்கள். குறிப்பிட்ட அளவு பணியிடங்கள் எப்போதும் காலியாகவே வைத்திருக்கப்படும்.
ஆனாலும், பெரும்பாலான காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
குரூப் 2 தேர்வு முதல் அதற்குக் கீழான தேர்வுகள் வரை அனைத்தும் கொள்குறி வகைத் தேர்வுகள் தான். அதாவது, ஒரு வினாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கண்ணை மூடிக் கொண்டு நீங்கள் "டிக்' அடிக்க, அத்தகையோருக்கு அதிர்ஷ்டமும் சேர்ந்து கொள்ள...அரசுப் பணி கிடைக்கும் பாக்யவான்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். எல்லோருமே அப்படி கிடையாது. இரவு, பகலாக கண்விழித்துப் படித்து வெற்றி பெறும் இளைஞர்க அதிகம். அப்படி வெற்றி பெறுவோர் நல்ல அரசுப் பணிகளில் தேர்வு பெறுவது நிச்சயம். சிறிய பதவிகளில் இருப்பதைக் காட்டிலும், குரூப் 2 போன்ற தேர்வுகளில் வென்று தலைமைச் செயலகம் போன்ற உயர்ந்த இடங்களில் பணியில் அமர்வதே சிறப்பு.
அப்படி பணியில் அமரும் இளைஞர்கள் பலர் தேர்வுக்குப் படிக்கும் போதே ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனுபவத்தில், "அட்வைஸ்' செய்கின்றனர் தலைமைச் செயலக பணியாளர்கள்.
இந்த அறிவுரைக்கு காரணமும் இருக்கிறது.
ஏனென்றால், குரூப் 2 தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்கள் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அரசு உத்தரவுகளுக்கான கோப்புகளை எழுதுவது உதவிப் பிரிவு அலுவலர்களின் முக்கியப் பணியாகும். அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசுத் துறைகளுக்கு கடிதம் எழுதும் போது ஆங்கில அறிவு அவசியம்.
ஆனால், அரசுத் துறைகளில் சேரும் இளைஞர்கள் பலருக்கு ஆங்கில அறிவு சற்றுக் குறைவு என்பது கவலை தரும் விஷயம். இதில், சற்று ஆறுதலான விஷயம் கடந்த சில ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தில் இளைஞர்களின் ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. அவர்களில் பலரும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்கள் என்பது தலைமைச் செயலக வட்டாரத்துத் தகவல். ஆங்கிலம் என்றவுடன் கிராமத்து இளைஞர்களுக்கு சற்று தயக்கமாக இருக்கலாம்.
ஆனால், அரசுப் பணிக்கு ஆங்கிலம் நன்கு தெரிந்தால் உயர்ந்த இடத்துக்கு நீங்கள் வரலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...