மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டத்துக்கு அல்ல; படத்துக்கு காசு...

நிறைய காசு சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் வாங்கிய பட்டம் தேவையில்லை. கற்பனைத் திறனும், புகைப்படம் குறித்த அடிப்படை அறிவும் இருந்தால் போதும். அப்படி என்னங்க வேலை என்று தானே கேட்கிறீர்கள். அது...ஆல்பம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:58 pm

குறிஞ்சிவேலன்

நிறைய காசு சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் வாங்கிய பட்டம் தேவையில்லை. கற்பனைத் திறனும், புகைப்படம் குறித்த அடிப்படை அறிவும் இருந்தால் போதும். அப்படி என்னங்க வேலை என்று தானே கேட்கிறீர்கள். அது...ஆல்பம் தயாரிப்பு பணி. இதற்கு மூலதனம் உங்களது இளமைத் துடிப்பும். ஆர்வமும் தான்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பலர் எம்.காம்., எம்.ஏ. போன்ற முதுநிலை பட்டம் பயின்றவர்கள்.

பட்டத்துக்குத் தகுந்த வேலை கிடைத்தாலும் இந்த அளவுக்கு கை நிறைய சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக் குறியே என்கிறார் புகைப்பட ஆல்பம் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சென்னையைச் சேர்ந்த சந்துரு.

தேவை என்ன? புகைப்பட ஆல்பம் தயாரிக்க முதலில், நீங்கள் "அடோப் போட்டோஷாப்' என்ற மென்பொருளைப் படிக்க வேண்டும். இதற்கு அனிமேஷன் படிப்புகளைப் போல அதிகம் செலவு ஆகாது. மிகக் குறைந்த கட்டணத்திலேயே

படிக்கலாம். படித்தால் மட்டும் போதாது. படித்ததை உடனடியாக கம்ப்யூட்டர் செய்முறை வடிவில் செய்து பார்த்தால் நல்லது.

படித்து முடித்து செய்முறையிலும் ஓரளவுக்குத் தேறிய பிறகு உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ லேப்பில் பணிபுரியுங்கள். அதிலிருந்து, நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெற முடியும். மேலும், தவறுகள் செய்தாலும் திருத்திக் கொள்ளலாம். ஏற்படும் தவறுகள் உங்கள் கையைக் கடிக்காது. எல்லாம் முதலாளியின் தலையில் விழுவதும் ஒரு பிளஸ் பாயின்ட்.

மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நன்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு நீங்கள் தனியாக களத்தில் இறங்கலாம். தனியாக தொழில் செய்து காசு சம்பாதிக்க சிறிதளவு முதலீடு தேவை. சுமார் ஒன்றரை முதல் 2 லட்சம் ரூபாய் போதும். இதைக் கொண்டு ஆல்பம் தயாரிப்பதற்கு தேவையானவற்றை வாங்க முடியும்.

கற்பனைத் திறன் முக்கியம்: சுயமாகத் தொழிலில் இறங்கிய பிறகு, நெருங்கிய மற்றும் உங்கள் நலனில் அக்கறை மிகுந்த நண்பர்களை மட்டுமே அருகில் விடுங்கள். தேவையில்லாத, உங்களின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்களை பக்கத்தில் அண்ட விடாதீர்கள். இதற்குக் காரணம், ஆல்பம் தயாரிப்புப் பணிக்கு கற்பனைத் திறன் அவசியம்.

உங்கள் கவனம் திசை திரும்பினால், வரக்கூடிய வாடிக்கையாளர்களும் தங்களது ஜாகையை மாற்றிவிட வாய்ப்புண்டு. இதனால், வாடிக்கையாளர்களை கவர்வதும், அவர்களுக்கு பிடித்தது போல பணியை முடித்துக் கொடுப்பதும் தொழிலில் உங்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும்.

வித விதமான ஆல்பங்கள்: ஆல்பங்கள் தயாரிப்பு என்பது முந்தைய காலம் போல சாதாரண விஷயம் அல்ல. முன்பெல்லாம், புகைப்படங்களை வெறும் அட்டையில் ஒட்டி அதை ஆல்பமாக்கித் தருவார்கள். ஆனால், இப்போது

புத்தக வடிவிலும், அட்டையில் படம் ஒட்டியது தெரியாத அளவுக்கு நவீன டிசைன்களிலும் தயாரிக்கப்படுகிறது. கரிஷ்மா, கான்வரா என ஆல்பங்களின் டிசைனுக்குத் தகுந்தாற்போன்று பெயரிடப்பட்டுள்ளது.

சீசனைப் பொறுத்து குவியும் ஆர்டர்களால் அதிகளவு காசு சம்பாதிக்கலாம். ஆனால், உங்களது கடின உழைப்பும், கற்பனைத் திறனும் இருந்தால் போதும். இவைகள் மட்டும் இருந்தால் போதுமா? எனக் கேட்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறு தகவல். உங்களுக்குச் சற்று ஆங்கில அறிவு இருந்தால், நீங்கள் மென்பொருளைக் கற்கவும், புகைப்பட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும்.

தம்பதிகள் தங்களது மலரும் நினைவுகளை அசைபோட  உதவுவது அவர்களது திருமண ஆல்பங்கள் தான். இந்த ஆல்பங்களை திருமணக் கனவுகளுடன் காத்திருக்கும்

துடிப்புமிக்க இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். வேலையில்லை எனக் காத்திருக்கும் இளைஞரா நீங்கள்...அப்ப ரெடியாகுங்க படம் வழியே பணம் சம்பாதிக்க.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.