கேமராவின் விலை 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்!
எல்16 என்றொரு கேமரா இப்போது உருவாகியிருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள லைட் என்ற நிறுவனம் இந்தக் கேமராவை உருவாக்கி இருக்கிறது.


எல்16 என்றொரு கேமரா இப்போது உருவாகியிருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள லைட் என்ற நிறுவனம் இந்தக் கேமராவை உருவாக்கி இருக்கிறது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தைக்கு வர உள்ள இந்தக் கேமராவின் விலை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்கள். அதாவது 1,700 அமெரிக்க டாலர்கள். அவ்வளவு விலையுள்ள இந்தக் கேமராவை உங்கள்
பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வளவு விலையுள்ள கேமராவில் அப்படியென்ன புதுசு? என்று கேட்கிறீர்களா? இந்தக் கேமராவில் 16 லென்ஸ்கள் இருக்கின்றன. ஐந்து 30 எம்எம் லென்ஸ்கள், ஐந்து 70 எம்எம் லென்ஸ்கள், ஆறு 150 எம்எம் லென்ஸ்கள் உள்ளன.
இந்த 16 லென்ஸ்களையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் படம் எடுக்கலாம். படங்களை எடுத்த பின்பு அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே படமாக, அதுவும் 52 மெகா பிக்ஸல் உள்ள படமாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
மிகவும் பக்கத்தில் உள்ளவற்றையும், மிகவும் தூரத்தில் உள்ளவற்றையும் இந்தக் கேமராவால் படம் பிடிக்க முடியும்.
அப்படி எடுத்த படங்களை, நீங்கள் உடனே வாட்ஸ் அப், பேஸ்புக் வழியாக அனுப்பவும் முடியும். இந்த ஆன்ட்ராய்டு கேமரா 5 அங்குல தொடுதிரையைக் கொண்டது.
முதலில் நீண்டநாட்களாக ஃபிலிம் கேமராக்கள்தாம் இருந்தன. அவற்றை ஓரங்கட்டி - டிஜிட்டல் கேமராக்கள் - DSLR கேமராக்கள் - வந்தன. வருங்காலத்தில் இந்த ஆன்ட்ராய்டு பல லென்ஸ் கேமராக்கள் டிஜிட்டல் கேமராக்களை ஓரங்கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்தக் கேமராவைப் பயன்படுத்தி வீடியோவும் எடுக்கலாம்.
இளம் வயதினரின் எல்லா நேரங்களையும் இன்றைய டிஜிட்டல் யுகம், படுவேகமாக உறிஞ்சி வருகிறது. கண்ணும் இமையும் போல கையும் செல்போனும் பிரிக்க முடியாத அங்கங்களாகிவிட்டன. டிஜிட்டல் போதை என்று சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.
இது இளம்வயதினரின் படைப்பாற்றலைக் குறைத்துவிடுகிறது; மன அழுத்தத்தை அதிகரிக்கிறது; யதார்த்த வாழ்விலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சிகரெட், மது, புகையிலை போன்ற பொருட்கள் அடங்கிய அட்டையில் "உடல் நலனுக்குக் கேடு' என்ற எச்சரிக்கை வாசகம் மண்டையோட்டுடனும் மனித எலும்புகளோடும் சிறிய அளவிலேனும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இந்த செல்போனுக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏனென்றால் இதை ஒரு போதை என்றே பெரும்பாலோர் நினைப்பதில்லை.
13- 17 வயதினரில் 24 சதவீதம்பேர் இந்த டிஜிட்டல் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களாம்.
இந்த டிஜிட்டல் போதையைக் குறைப்பதற்கு செல்போன் தயாரிப்பவர்களே சில புதிய அம்சங்களைச் செல்போனில் புகுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.
நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால், செல்
போனின் திரை சிவப்பு நிறமாக மாறுவது, ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்வது
போன்றவற்றைப் புகுத்தலாம் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...