மருந்தியல் பட்டப் படிப்பு... வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு!
ஐ.டி. எனப்படும் தகவல்தொழில்நுட்பத் துறையில் இருப்பது போல் மருந்தியல் பட்டப்படிப்பு (B.Pharm) படித்தவர்களுக்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.


ஐ.டி. எனப்படும் தகவல்தொழில்நுட்பத் துறையில் இருப்பது போல் மருந்தியல் பட்டப்படிப்பு (B.Pharm) படித்தவர்களுக்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
இதுபற்றி கடையநல்லூர் பாத்திமா மருந்தியல் கல்லூரியின் செயலர் ரவி கூறியதிலிருந்து...
B.Pharm எனப்படும் நான்காண்டு கால மருந்தியல் பட்டப்படிப்பினை படித்து முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பி.பார்ம் முடித்தவர்கள் எளிதில் வேலை பெற முடியும். இன்னும் சொல்லப்போனால் மென்பொருள் துறையில் வாங்கும் சம்பளத்தை விட இத்துறையில் கூடுதல் சம்பளமும் பெற முடியும்.
பி.பார்ம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அரசுத்துறையைப் பொறுத்தவரை மருந்து ஆய்வாளர், மருந்து பகுப்பாய்வாளர், மருந்தாளுநர் பணிகளில் சேர முடியும். மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மருத்துவத் துறைகள், ரயில்வே, ராணுவம் உள்ளிட்டவற்றில் வேலை வாய்ப்பினை பெற முடியும். மருந்து தொழிற்சாலைகளில் மருந்து உற்பத்தியாளர், மருந்து பகுப்பாய்வாளர், மருந்தாக்குநர், மருந்து ஆராய்ச்சி விஞ்ஞானி போன்ற பணிகளில் சேர்ந்து பணியாற்ற முடியும். மருந்து விநியோகத்துறையில் மருந்து மொத்த வியாபாரம், மருந்து சில்லறை வியாபாரம், விற்பனை பிரதிநிதி உள்ளிட்ட பணிகளில் நுழைந்து பெருமளவு பணம் ஈட்ட முடியும்.
தாவர மருந்துத் துறையில் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் அதை ஏற்றுமதி செய்யவும் முடியும். மேலும் தனியார் மருந்தியல் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு பெறுவதுடன்,தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களாகவும் வேலை செய்ய முடியும். இதுதவிர வெளிநாட்டு மருத்துவரின் வாய்மொழித் தகவல்களை வடிவமாக்கி ஒழுங்குபடுத்தும் பணிக்கும் அதிகளவில் தேவை இருப்பதால் இப்படிப்பை நிறைவு செய்பவர்கள் உறுதியாக வேலைவாய்ப்பை பெற முடியும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...