ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 100

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2017, 5:57 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது புரொபஸர் I heard it on the grapevine  என்கிறார். அதென்ன grapevine?

மீனாட்சி: நான் சொல்றேன். ஒரு தகவலை நான் சொல்லும் போது உன்னால் நம்ப முடியவில்லை. "உண்மையா? உங்களுக்கு எப்படித் தெரியும்?' என
கேட்கிறாய். நான் சொல்கிறேன். "இல்லையப்பா எனக்கு ஒருவர் சொன்னார்' என. அது தான் heard on the grapevine. 
Captain Flint: ஆமாம். பொருளாளர் இறந்து விட்டார்.
கணேஷ்: எந்த பொருளாளர்?
Captain Flint: ஏதோ ஒரு பொருளாளர். உடனே மருத்துவமனை தலைமை பொறுப்பில் உள்ளவர் தோன்றி, "இல்லை இறக்கவில்லை. நாங்கள் அறிக்கை தரும் வரை இறக்கவில்லை'' என்கிறார்.  ஆனால் மக்களுக்குத் தெரியும். They heard it on the grapevine.
கணேஷ்: அதாவது அதிகாரபூர்வமற்ற முறையில் அறிந்து கொள்வது.
மீனாட்சி:  கரெக்ட்
கணேஷ்: அது சரி, ஆனால் grapevine என்றால் திராட்சைக்கொடி தானே?
மீனாட்சி: ஆமாம்
கணேஷ்: திராட்சைக் கொடிக்கும் வதந்திக்கும் என்ன சம்பந்தம்?
Captain Flint: ஏன் எப்போ பார்த்தாலும் "நொய்நொய்'ன்னு கேள்வி கேட்கிறே? உன் மூக்கைக்  கொத்திடுவேன். 
(கணேஷ் தள்ளிப் போய் நிற்கிறான்)
கணேஷ்: உன் மூக்கு ஏன் இவ்வளவு சிகப்பா இருக்கு? மனிதர்களுக்கு ஏன் மூக்குக்கு பதில் உதடுகள் சிவப்பாய் இருக்கின்றன?
Captain Flint பறந்து கணேஷின் தோளில் போய் அமர்கிறது:  இனி கேள்வி கேட்டே உன் மூக்கும் சிவந்திரும். I will decapitate and throw you in the seas.
கணேஷ்: ஐயோ...
Captain Flint: ஏன் ஐயோ?
கணேஷ்:  நீ சொன்னது எனக்கு முழுசாப்  புரியல. ஆனால் என்னமோ பயங்கரமா பிளான் பண்றே!
Captain Flint: Decapitate என்றால் தலையைத்  தனியாய் துண்டிப்பது. 
கணேஷ்: Chop off the head?
Captain Flint: ஆமாம். 
கணேஷ்: ஆனால் அதுக்கு ஏன் இவ்வளவு கடாமுடாவென ஒரு வார்த்தை?
Captain Flint: தம்பி, இது நீ கேட்கிற கடைசி கேள்வி சரியா?
கணேஷ்: சரி...
Captain Flint: Decapitate என்பது ஒரு மிகப்பழைய வார்த்தை. Capit எனும் லத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. Capit என்றால் லத்தீனில் தலை. De-
எனும் prefixdÏக்கு நீக்குவது எனப் பொருள். தலையை நீக்குவது எனும் பொருள் இப்படித் தான் வருகிறது.  சரி Deactivate கேள்விப்பட்டிருக்கிறாயா?
கணேஷ்: ஆமாம். DTH டிவி சேனல் ஒன்றை நீக்குவதற்கு போன் செய்து டீ ஆக்டிவேட் பண்ண சொல்லுவோம்.
Captain Flint: அதாவது ஆக்டிவேஷனை நிறுத்த அல்லது நீக்க கேட்பாய். Detox?
கணேஷ்:  பேஸ்புக்கில் யாரோ டிடாக்ஸ் பண்ணப் போவதாய் எழுதியிருந்தார்கள்.
Captain Flint: அதான் என்ன?
கணேஷ்: கேடான உணவுகளின் தாக்கத்தில் இருந்து உடம்பை விடுவிப்பது. 
Captain Flint: உடம்பைச்  சுத்தீகரிப்பது. Deaddiction? Deaddiction center கேள்விப்பட்டதில்ல?
கணேஷ்: என் குடிகாரச் சித்தப்பாவை போன மாசம் கொண்டு போய் சேர்த்தாங்க.
Captain Flint: கரெக்ட். De- எனும் முன்னொட்டு வந்தாலே நீக்குவது எனும் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். Deallocateதெரியுமா? Allocate என்றால்
ஒதுக்கீடு. வங்கியில் அல்லது நூலகத்தில் உனக்கென ஒரு லாக்கர் தந்திருப்பார்கள். அதை உனக்கு இனித் தரப் போவதில்லை. உனக்கு ஒதுக்கப் போவதில்லை.
அதை நீ ஒழிக்க வேண்டும் என உனக்கு ஒரு கடிதம் வருகிறது. அப்படி என்றால் they deallocate your locker. 
கணேஷ்: எனக்கு இன்னொரு லாக்கர் தந்தால்?
Captain Flint: Reallocate. சரி debrief தெரியுமா?
கணேஷ்: Brief கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரிடம் ஒரு விசயத்தைப் பற்றி தெளிவாக விளக்குவது.
Captain Flint: பாதி சரி. ஒரு விசயம் நடப்பதற்கு முன்பு அதற்கு ஒருவரை தயார்ப்படுத்தும் நோக்கில் அதைப் பற்றி விளக்குவது தான் briefing. உதாரணமாக, நீ
உனது நண்பனுக்காக உன் சிறுநீரகத்தை தானம் செய்கிறாய்.
கணேஷ்: ஐயோ...
Captain Flint: பதறாதே. மருத்துவர்கள் நடக்கப்போகும் அறுவை சிகிச்சை பற்றி brief செய்கிறார்கள். எந்த ஆபத்தும் இல்லை என ஆறுதல்படுத்துகிறார்கள்.
ஆனால் ஆபரேசனுக்குப் பிறகு தான் தெரிய வருகிறது...
கணேஷ்: என்ன?
(இனியும் பேசுவோம்) 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.