வாங்க இங்கிலீஷ் பேசலாம் 117
புரொபஸர் ad rip எனும் லத்தீன் சொல்லில் இருந்து arrive எனும் ஆங்கிலச் சொல் உருவான கதையை சொல்கிறார். கணேஷ் இரண்டு சொற்களுக்குமான


புரொபஸர் ad rip எனும் லத்தீன் சொல்லில் இருந்து arrive எனும் ஆங்கிலச் சொல் உருவான கதையை சொல்கிறார். கணேஷ் இரண்டு சொற்களுக்குமான ஒலி வேறுபாட்டை குறிப்பிட்டு எப்படி ad rip arrive ஆகி மாறியது எனக் கேட்கிறான்.
புரொபஸர்: சிம்பிள். ஆங்கிலத்துக்கு வந்ததும் adஇல் உள்ள d ஆர் எனும் ஒலியைப் பெற்றது rip இல் உள்ள ப் ஒலி வ ஒலியாக மருவியது. இப்படி மாற்றி படித்துப் பார்.
கணேஷ்: அர்ரிவ்
புரொபஸர்: ஆமாம். சீக்கிரமே இந்த ஒலி மருவி அர்ரைவ் என ஆனது. தேஷ் எனும் வடமொழிச் சொல் தமிழில் தேசம் என்றாகவில்லையா? அது போலத் தான். சரி, உன் மேடம் கிரிக்கெட்டில் arrive மற்றும் reach ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுவதில் உள்ள வித்தியாசங்களைக் குறிப்பிட்டார் இல்லையா?
மீனாட்சி: அதுக்கு என்ன?
புரொபஸர்: அதுக்கு ஒண்ணுமில்ல. சென்று சேரும் இடம் உறுதியாய் முன்கூட்டியே தெரியவில்லையென்றால் reachஐ பயன்படுத்த வேண்டுமென்று சொன்னாய் இல்லையா?
மீனாட்சி: ஆமா
புரொபஸர்: எனக்கு அவ்விசயத்தில் ஒரு சந்தேகம்.
மீனாட்சி: கேளுங்க
புரொபஸர்: ஒருவர் எதிர்பார்த்த வேளையில் ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார் எனச் சொல்லத் தானே arrived?
மீனாட்சி: ஆமா
புரொபஸர்: ஆனால் அவர் வந்து சேர்ந்த இடம் தெரியவில்லை. He arrived at the airport in the evening என சொல்லுமளவு துல்லியமாய் தகவல் தெரியவில்லை. அப்படி எனில் He arrived in the evening என சொல்லலாமா?
மீனாட்சி: சொல்லலாம்.
புரொபஸர்: அதெப்படி? Arrive என்பதே ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதை குறிக்கும் சொல் அல்லவா? இன்ன இடம் என சொல்ல முடியாத பட்சத்தில் எப்படி அவ்வாறு மேற்சொன்னபடி பயன்படுத்த முடியும்? தப்பில்லையா?
மீனாட்சி: இல்லையே. அந்த வாக்கியத்தில் வந்து அவர் சேர்ந்த இடம் தெரியாதென யார் சொன்னது? தெரியுமே.
புரொபஸர்: எப்படித் தெரியும்? யாருக்குத் தெரியும்?
மீனாட்சி: பார்த்தவருக்குத் தெரியும்.
புரொபஸர்: பார்த்தவர் தான் அங்கே இல்லையே? அந்த வாக்கியத்தில் அதைப் பார்த்தவர் பற்றி குறிப்பில்லையே?
மீனாட்சி: அவ்விசயம் அங்கே understoodஆக உள்ளது. ஒருவர் பார்த்து நம்மிடம் சொல்கிறார். அப்படி பார்த்தவர் மறைவாய் அவ்வாக்கியத்தில் உள்ளார்.
புரொபஸர்: Interesting
மீனாட்சி: அவருக்குத் தெரியும் இவர் வந்து சேர்ந்த இடம்.
புரொபஸர்: ம்ம்ம்...
மீனாட்சி: சரி, நான் காப்பி போடுகிறேன். கணேஷ் உனக்கு என்ன காப்பி வேண்டும்? Bru?
கணேஷ்: அவ்வளவு கசப்பு எனக்குப் பிடிக்காது.
மீனாட்சி: சரி காப்புச்சீனோ சாப்பிடுறியா? மைல்டா நல்ல வாசனையா இருக்கும்.
கணேஷ்: சந்தோஷமா
புரொபஸர்: இந்த காப்புச்சீனோ என்ற பெயர் எப்படி வந்ததெனத் தெரிந்தால் நீ ரொம்ப ஆச்சரியப்படுவாய் கணேஷ்.
கணேஷ்: ஏதாவது ஒரு ஐரோப்பிய ஊரின் பெயராக இருக்கும்.
புரொபஸர்: ம்ஹும்...
கணேஷ்: இந்த காப்பி வகையைக் கண்டுபிடித்தவரின் பெயரோ?
புரொபஸர்: இல்லவே இல்ல
கணேஷ்: சார் ப்ளீஸ் சொல்லுங்க
புரொபஸர்: இத்தாலியில் முன்பு காப்புச்சீன் என்னும் பெயரில் துறவிகள் இருந்தார்கள். அவர்களின் robe அதாவது அங்கி இளம் சாக்கலேட் பிரவுன் நிறத்தில் அப்படியே காப்புச்சீனோ வண்ணத்தில் இருக்கும். அதைக் கண்ட எவரோ தான் காப்புச்சீனோ என பெயரிட்டார்கள்.
கணேஷ்: காப்பி டேயில் இதைக் குடிக்கையில் துறவிகளின் பெயர் இதற்கு இட்டிருக்கிறார்கள் என நான் சத்தியமாய் நினைக்கவில்லை.
புரொபஸர்: ஹா ஹா. அதிலும் இந்த துறவிகள் இருக்கிறார்களே ரொம்ப எளிமையானவர்கள். எளிய மக்களுக்கு சேவை செய்வதே தம் தர்மம் என வாழ்ந்தவர்கள். கொஞ்சமே கொஞ்சம் உணவு. நெடுந்தூரம் செருப்பில்லாமல் நடந்து பயணம். இதுவே அவர்களின் வாழ்க்கை முறை. இப்போ காபி டேயில் காப்புச்சீனோ குடிக்கிறவர்களை இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்.
கணேஷ்: நேர்கீழ்
மீனாட்சி காப்பி கொண்டு வருகிறார். இருவருக்கும் கொடுக்கிறார்.
கணேஷ்: தாங்க்ஸ் மேடம் (புரொபஸரை நோக்கி) என்ன சார் உங்க காப்பியில் பால் சேர்க்கலையா?
புரொபஸர்: இது espresso
கணேஷ்: இதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் அவசர காப்பி சார்
புரொபஸர்: ஏன்?
கணேஷ்: Expresso என்றால் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பால் சேர்க்கக் கூட அவகாசம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட காப்பி என என் மனதில் பதிந்து போனது சார்.
புரொபஸர்: ஆனால் உண்மையில் express எனும் சொல்லுக்கும் espressoவுக்கும் சம்பந்தம் இல்லை.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...