ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 118 

Expresso எனும் காப்பி வகையின் பெயர் எப்படித் தோன்றியது என புரொபஸர் கணேஷிடம் விளக்குகிறார். 

News image
Updated On :19 டிசம்பர் 2017, 6:00 am

ஆர்.அபி​லாஷ்

Expresso எனும் காப்பி வகையின் பெயர் எப்படித் தோன்றியது என புரொபஸர் கணேஷிடம் விளக்குகிறார். 
புரொபஸர்: Espresso எனும் இத்தாலிய சொல்லுக்கும் expressக்கும் சம்பந்தமில்லை. அதன் வேர் pressoவில் உள்ளது.
கணேஷ்: டழ்ங்ள்ள் செய்வதா?
புரொபஸர்: ஆமா. Squeeze எனும் அர்த்தத்தில். இந்த வகை காப்பி செய்ய காப்பிக் கொட்டைகளை சுடுநீர் வழியே பாய்ச்சி பிழிந்து எடுப்பார்கள். அப்படித் தான் pressed coffee எனும் பொருளில் espresso தோன்றியது. ரெண்டு ஸ்பெல்லிங் ஆங்கிலத்தில் உண்டு. ஒன்று  s  சேர்த்து espresso. இன்னொன்று x கொண்டு expresso. ரெண்டுமே ஒன்று தான். எனக்கு இது தான் பிடித்தமான காப்பி. எவ்வளவு மந்தமாய் இருந்தாலும் இது ஒரு கப் அடித்தால் மண்டை தெளிவாகி விடும். உற்சாகம் பெருகும். 
கணேஷ்: சார்... பால் காப்பி உடம்புக்கு கேடா என்ன?
புரொபஸர்: அப்படி எல்லாம் இல்லை. ஒவ்வொரு வகை காப்பிக்கும் ஒரு விளைவு, பயன்பாடு, சுவை, ஸ்டைல் எல்லாம் உண்டு. சரி, இந்த மாதிரி பால் இல்லாத காப்பியில் கொஞ்சூண்டு பால், லேசாய் ஒரு தீற்றலாய் சேர்த்தால் அதன் பெயர் மாறி விடும். Macchiato. உச்சரிப்பு மெக்கியாட்டோ. மெக்கியாட்டோ என்றால் என்ன தோன்றுகிறது?
கணேஷ்: கத்தி சார். Machete.
புரொபஸர்: ஆமா பட்டாக்கத்தி. மெஷேட்டி என்பது உச்சரிப்பு. ஆனால் macchiatoவும் இந்த பட்டாக்கத்தியும் வெவ்வேறு சொற்கள். Machete என்றால் ஸ்பேனிஷில் பெரிய சுத்தியல் என அர்த்தம். எப்படி சுத்தியலில் இருந்து அவ்வார்த்தை கத்திக்கு மாறியது எனத் தெரியவில்லை. Macchiato என்றால் spot என்று அர்த்தம். A spot of milk. அப்படி என்றால் கொஞ்சம் பால் என அர்த்தம். Cafe macchiato அதாவது கொஞ்சம் பால் சேர்த்த காப்பி என்பது சுருங்கி வெறுமனே கொஞ்சம் பால் எனும் பொருளில் இப்போது வெறுமனே macchiato ஆகி விட்டது. 
மீனாட்சி: சரி... வேர்ச்சொல் ஆராய்ச்சி எல்லாம் அப்புறம் பண்ணலாம். முதலில் காப்பியை ரசிச்சு குடிங்க. (அவர் டிவியை இயக்குகிறார். honey honey money money என பாடல் காட்டப்படுகிறது. மீனாட்சி ரசித்து காலாட்டியபடி பார்க்கிறார்.)
கணேஷ்: சார்... இந்த ஹனி மனி பாட்டுக் கேட்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் வருது. ரொம்ப நாளா யோசிச்சிக்கிட்டு இருந்த விசயம் தான்.
புரொபஸர்: என்ன?
கணேஷ்: Money என்பதற்கும் cashக்கும் என்ன வித்தியாசம்? நான் ஒரு டிவி வாங்கிறேன்னு வையுங்க. அப்போது cash கொடுப்பதும் money கொடுப்பதும் ஒன்று தானா?
புரொபஸர்: ஒண்ணு தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.
கணேஷ்: என்ன சார்?
புரொபஸர்: நீ பணமா கொடுக்கிறியா இல்லை கடன் அட்டை வழியா செலுத்துறியா இல்லை இணையதளம் வழியாக பணம் அனுப்பிறியா? இதையெல்லாம் பொறுத்து அது மாறும். Cash என்றால் ரூபாய் நோட்டு மட்டுமே. ஆனால் money என்பது உருவமற்ற வடிவம். அது எல்லாவகையான பணத்தையும் குறிக்கும். அட்டை, ஆன்லைன் இப்படி.
மீனாட்சி: Money is like god. கடவுள் எல்லாமாகவும் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பார். எல்லா வடிவங்களையும் எடுப்பார்.
கணேஷ்: அப்பிடீன்னா cash?
மீனாட்சி: Cash is like சாமியார். அவருக்கு என்று ஒரு பெயர், தோற்றம், இடம், அடையாளம் எல்லாம் உண்டு. சரி, அதை விடு, பசிக்குதா? சாப்பிட எதாவது வேணுமா? உப்புமா?
கணேஷ்: ஐயோ உப்புமாவா?
மீனாட்சி: ஏன் ஆம்பிளைங்களே உப்புமான்னா நடுங்குறீங்க?
கணேஷ்: இல்ல... அப்படி இல்ல. என்ன உப்புமா?
மீனாட்சி: சேமியா
கணேஷ்: ஐயோ வேணாம். அது புழு.
மீனாட்சி: புழுவா?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.