வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 119
புரொபஸரின் வீட்டில் இருக்கும் கணேஷுக்கு மீனாட்சி காபியுடன் சாப்பிட சேமியா உப்புமா வேண்டுமா? எனக் கேட்கிறார். அவன் உடனே, ""ஐயோ புழு''என்கிறான். ஏன்?


புரொபஸரின் வீட்டில் இருக்கும் கணேஷுக்கு மீனாட்சி காபியுடன் சாப்பிட சேமியா உப்புமா வேண்டுமா? எனக் கேட்கிறார். அவன் உடனே, ""ஐயோ புழு''என்கிறான். ஏன்?
மீனாட்சி: என்ன சொல்றே? சாதா சேமியா இது. இதுக்குப் போய் ஏன் டென்ஷனாகிறே?
கணேஷ்: இல்ல மேடம், சின்ன வயசில இருந்தே சேமியாவைப் பார்த்தா எனக்கு தட்டு நிறைய புழுக்கள் நெளியுற ஃபீலிங் வரும். அதனால நான் சேமியா
சாப்பிடுறதே இல்ல.
புரொபஸர்: You are not alone in this.
கணேஷ்: ஆங்?
புரொபஸர்: உலகத்தில் உனக்கும் மட்டும் அந்த உணர்வு ஏற்படலைங்கிறேன்.
கணேஷ்: ஏன் சார்?
புரொபஸர்: கணேஷ் சேமியாவைக் கண்டுபிடிச்சவனுக்கே அந்த அருவருப்பு இருந்திருக்கு.
கணேஷ்: எப்படி?
புரொபஸர்: சேமியாவுக்கு ஆங்கிலத்தில் vermicelli. அந்த சொல் உனக்கு ஒரு ஆங்கிலச் சொல்லை நினைவுபடுத்துதா?
(அந்நேரம் தட்டு நிறைய ஆவி பறக்கும் சேமியாவுடன் மீனாட்சி அங்கு வருகிறார். ஸ்பூனால் அதை எடுத்து ஸ்டைலாய் சாப்பிட்டபடி கவனிக்கிறார்)
மீனாட்சி: You guys, will you stop this conversation please.
புரொபஸர்: நீ சொல்லுடா
கணேஷ்: ம்..ம்..ம்... worm?
புரொபஸர்: Vermis என்றால் இத்தாலியில் புழு. Vermicelli என்றால் சின்ன புழுக்கள் என்று அர்த்தம். இந்த சேமியா 1660களில் இருந்தே இத்தாலியில் புழக்கத்தில் உள்ள உணவுப் பொருள். அந்த ஊர் மக்களுக்கு இதை எப்போது பார்த்தாலும் புழுக்கள் நினைவுக்கு வரத் தவறாது.
கணேஷ்: ஓ...
புரொபஸர்: ம்..ம்..ம்... அதிலும் இந்த vermis என்ற சொல்லில் இருந்து worm எனும் சொல் தோன்றுகிறது. இந்த சொல்லின் வேர்ச்சொல்லை அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவாய். Wer எனும் சொல் தான் இதற்கு மூலம். இதன் பொருள் "நெளிவது'. அதாவது நெளிகிறவை தாம் புழுக்கள்.
கணேஷ்: சார், எனக்கு தட்டில் கிடக்கிற சேமியா எல்லாம் லேசா நெளியிற மாதிரி இருக்கு.
மீனாட்சி: இதுக்கு மேலே பேசினீங்கன்னா இதை அப்படியே எடுத்து உங்க ரெண்டு பேர் தலையிலையும் கொட்டிடுவேன்.
புரொபஸர்: வேணாம்... வேணாம். நாம் வேறொரு சுவாரஸ்யமான ஐட்டத்தோட வரலாற்றைப் பற்றி பேசுவோம்.
கணேஷ்: என்ன சார் அது?
புரொபஸர்: Cocktail
கணேஷ்: ஆமா சார். எனக்கு அது பிடிக்கும். சரக்கில் ஜூஸ் கலந்து கொடுக்கிறது தானே.
புரொபஸர்: ஆமா. ஆனால் பிராந்தியில் கோக் கலப்பதல்ல காக்டெய்ல். நல்ல காக்டெய்ல் பண்ணுவது ஒரு தனி கலை. அது போகட்டும். அந்த சரக்குக்கு எப்படி காக் மற்றும் டெய்ல் எனும் விசித்திரமான சொற்சேர்க்கை ஏற்பட்டதென யோசித்திருக்கிறாயா?
கணேஷ்: சார் காக் என்றால் கோழி. டெய்ல் என்றால் வால். கோழியின் வாலா சார்?
புரொபஸர்: Cock என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டே. அதாவது லேசாய் ஒரு திசை நோக்கி சாய்ப்பது. பண்ப்ற். Tilt. When the plate crashed on the floor, the blind dog cocked its head towards the direction of the sound. அதாவது அந்த நாய் ஒரு குருடு. வீட்டில் ஒரு தட்டு விழுந்து உடைகிறது. நாய் தன் தலையை உடனே சத்தம் வந்த திசை நோக்கி சாய்த்து கவனிக்கிறது.
கணேஷ்: அடடா...
புரொபஸர்: ஆமா. சில பேர் சோறுண்ணும் போது உள்ளங்கையில் கவளம் கவளமாய் உருட்டி விழுங்குவார்கள். இன்னும் சிலரோ அப்படி உள்ளங்கையில் படாமல் விரல்களால் ரொம்ப நாசூக்காய் சாப்பிடுவார்கள். அப்போது அவர்களின் சிறுவிரல் மட்டும் தனியே மடிந்து வெளித் தெரியும்.
கணேஷ்: ஆமா சார் பார்த்திருக்கேன்.
புரொபஸர்: அது cocking the little finger. அதே போல காலை மடித்து தொங்க போடுவதையும் சொல்லலாம். He spread out on the sofa, with his legs cocked over the sides. அவன் சோபாவில் சாய்ந்து படுத்தபடி கால்களை கைப்பிடி மீது தொங்கப் போட்டான்.
கணேஷ்: அருமை சார். இதுக்கெல்லாம் தனி வார்த்தை இருக்குதா?
புரொபஸர்: ஆமாடா. அது தான் ஆங்கிலத்தோட அழகே. நாய் காலைத் தூக்கி உச்சா போறதுக்கே வார்த்தை தனியா இருக்குது தெரியுமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...