நேர்காணலில் என்ன சம்பளம் என்று கேட்கக் கூடாது... ஏன்?
வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.


வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் பங்கேற்கும் எந்த நேர்காணலிலும் முதல் 5-10 நிமிடங்களுக்குள் உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுப்பதா? அல்லது வேலை தராமல் விட்டுவிடுவதா? என்ற முடிவுக்கு உங்களை நேர்காணல் செய்பவர்கள் வந்துவிடுவார்கள். அப்படியானால் அந்த பத்து நிமிடங்களுக்குள் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கேள்விகளுக்கு எந்தவிதமாகப் பதில் சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் திட்டமிட வேண்டும். அதற்கான வழிகாட்டும் குறிப்புகள் இதோ:
1. உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கும் உங்களை நேர்காணல் செய்பவர், அறிவிலும் அனுபவத்திலும் உங்களைவிட சிறந்தவராகவே இருப்பார். எனவே எந்தச் சூழ்நிலையிலும் அவரிடம் விவாதம்
செய்யவே கூடாது.
2. நேர்காணல் நடக்கும் இடத்திற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அது நேர்காணலில் நீங்கள் முழுமையாக மனத்தளவில் தயாராக உதவும்.
3. நேர்காணலின் போது நீங்கள் எந்தப் பதிலையும் உணர்ச்சிவசப்பட்டு கூறக் கூடாது. அமைதியாகவும், உண்மைகள், புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் உங்களுக்குத் தரப்படும் வேலை அதிக டென்ஷன் உள்ளதாக இருக்கலாம். பல பிரச்னைகளை டென்ஷன் இல்லாமல் சமாளிக்கும் தேவை இருக்கலாம். அதற்கெல்லாம் நீங்கள் தகுதியானவரா என்பதை நேர்காணலின் போது உங்களைச் சோதித்துப் பார்ப்பார்கள்.
4. எந்த நிறுவனத்துக்கு வேலைக்குப் போனாலும், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு போக வேண்டும். அந்த நிறுவனத்தின் பணிகள், அவர்களுடைய வாடிக்கையாளர்கள், அந்நிறுவனத்தின் தொழில் போட்டியாளர்கள், வளர்ச்சி எல்லாவற்றையும் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? என்பதை நேர்காணல் செய்பவர்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.
5. நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும் நிறுவனத்தில் எந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தீர்களோ... அந்த வேலையைப் பற்றியும், அதை எப்படித் திறம்படச் செய்வது என்பதைப் பற்றியும் ஓரளவுக்காவது நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
6. உங்களை நேர்காணல் செய்பவர் உங்களிடம் இப்படிக் கேட்கலாம்: ""இந்த வேலையை உங்களுக்கு எதற்காக நாங்கள் தர வேண்டும்?'' இதற்கு நீங்கள் சொல்லும் பதில் உங்களுடைய மனோபாவம், எதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்களின் பதில் அவர்களுடைய நிறுவனத்தின் நலனுக்கு ஒத்துப் போகும் எனில் உங்களை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள்.
7. ""ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா'' என்று நேர்காணல் செய்பவர் உங்களைக் கேட்டால், நீங்கள் உடனே எவ்வளவு சம்பளம் தருவீர்கள்? சம்பளம் தவிர, பிற பலன்கள் எவையெவை உள்ளன? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தீர்கள் என்றால், நிச்சயம் அந்த வேலை உங்களுக்குக் கிடைக்காது. வேலையைச் சிறப்பாகச் செய்வதை விட சம்பளத்தைத்தான் நீங்கள் பெரிதாக நினைக்கிறீர்கள் என்று அவர்கள் முடிவெடுத்துவிடுவார்கள்.
8. எந்த நேர்காணலிலும் சிக்கலான கேள்விகளைத் தந்திரமாகக் கேட்பார்கள். உங்களுக்கு நன்றாக அதற்குப் பதில் தெரிந்திருந்தால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். ஏதோ கொஞ்சம் தெரிந்ததை வைத்து தவறாகப் பதில் செல்வதைவிட, கேள்விக்குப் பதில் தெரியவில்லை, தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்வது நல்லது.
9. ""உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?'' என்று நேர்காணல் செய்பவர் உங்களிடம் கேட்கும்போது அது ஒரு பொதுவான கேள்வி போலத் தோன்றக் கூடும். ஆனால் அதற்குச் சரியாகவும், சுருக்கமாகவும் பதில் சொல்வது மிகவும் சிரமம். எனவே அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதை முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.
10. நேர்காணலுக்குச் செல்லும்போது டி ஷர்ட் அணிந்து செல்வது, சாதாரண செருப்பணிந்து செல்வது, வாயில் சூயிங்கம் மென்று கொண்டிருப்பது எல்லாம் கூடவே கூடாது. நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாக, உங்களை நேர்காணல் செய்பவர் புரிந்து கொள்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...