விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 115

Story என்ற சொல் மாடியைக் குறிக்க எப்படி ஏற்பட்டது என கணேஷ் புரொபஸரிடம் வினவுகிறான்.

News image
Updated On :28 நவம்பர் 2017, 5:41 am

ஆர்.அபி​லாஷ்

Story என்ற சொல் மாடியைக் குறிக்க எப்படி ஏற்பட்டது என கணேஷ் புரொபஸரிடம் வினவுகிறான்.
புரொபஸர்: கணேஷ் நான் சொல்லப் போற பதில் கொஞ்சம் வினோதமா தெரியலாம். ஆனால் இது உண்மை.
இந்த சொல் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்தில் புழக்கத்துக்கு வந்தது. அப்போது கணிசமான மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். விவிலியத்தை வாசிக்கத் தெரியாதவர்கள். அவர்களுக்காக விவிலியக் கதைகளை வீட்டுச் சுவர்களில் ஓவியமாய் வரையும் வழக்கம் அப்போது ஏற்பட்டது. இரண்டு மாடி வீடு ஒன்று உள்ளதென்றால் முதல் மாடியில் ஒரு கதையும் இரண்டாம் மாடியில் இன்னொரு கதையும் வரையப்பட்டிருக்கும். இரண்டாம் மாடிக்காரர் தன் வீட்டை அங்கு வரையப்பட்டிருக்கும் கதையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார். "உன் வீடெங்கேப்பா?'' என்று யாராவது கேட்டால், "அவர் ரெண்டாவது கதை இருக்குமே அந்த வீடுங்க' என்பார். அதாவது my house is in the second story என்பார். ஆனால் பின்னர் இந்த பழக்கம் விட்டுப் போக floor வந்தது. மக்கள் second floor என சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனாலும் உயரத்தைக் குறிக்க story எனும் சொல் இன்றும் நிலுவையில் உள்ளது.
கணேஷ்: சார் எங்க கிராமத்தில் ஒரு வீட்டு மதில் மீது மயிலின் சின்ன சிலை இருக்கும். அந்த வீட்டையே மயிலு வைத்த வீடுன்னு எங்க ஊரில் சொல்வாங்க. அப்படியே அது மருவி அந்த குடும்பக்காரங்களே மயிலு வீட்டுக்காரங்க ஆயிட்டாங்க.
புரொபஸர்: சரிதான். Interesting. ஆனால் நம்ம ஊரில் ஆன்மிகக் கதைகளை சித்திரமாய் சுவரில் வரையும் வழக்கம் குறைவு. நம்முடையது வாய்வழிக் கதை மரபு. ஆங்கிலேயருக்கு எழுத்து முக்கியம். 
(அழைப்பு மணி அடிக்கிறது. மீனாட்சி வேகமாய் சென்று திறக்கிறார். காசைக் கொடுத்து ஒரு பார்சலை வாங்குகிறார். உற்சாகத்தில் ஒரு முறை துள்ளி விட்டு பார்சலைக் கட்டிக் கொள்கிறார்.)
மீனாட்சி: Finally arrived. Been waiting for a week now.
புரொபஸர்: நான் என்னை ஒரு பெரிய கார்ட் போட் டப்பாவில போட்டு முகவரி எழுதி அமேசான்காரன் மூலமா இந்த வீட்டுக்கு 
இப்படி வந்து arrive ஆகிடலாமான்னு பார்க்கிறேன். 
கணேஷ்: ஏன் சார்?
புரொபஸர்: எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு வரவேற்பு கிடைத்து பல வருசங்கள் ஆகுது.
மீனாட்சி: நீங்க எல்லாம் டப்பாவில வந்தா ஜன்னல் வழியா தூக்கி கடாசிருவேன். ஆளைப் பாரு.
கணேஷ்: சார்...
புரொபஸர்: என்னடா இப்போ போய்? நீ மட்டும் இங்கே இல்லேன்னா சிவாஜி பத்மினி ஸ்டைலில் ஒரு ரொமான்ஸ் சீன் அரங்கேறி இருக்கும். இப்போ என்ன வேணும் உனக்கு?
கணேஷ்: ஒரு டவுட்.
புரொபஸர்: ம்ம்ம்...
கணேஷ்: Arrivedக்கும் reachக்கும் என்ன வித்தியாசம்? ஏன் பார்சல் arrivedன்னு சொல்லணும்? ஏன் reached கூடாது?
புரொபஸர்: வர... வர... நீ ரொம்ப நல்ல கேள்விகளா கேட்குறே. ஆனால்?
கணேஷ்: ஆனால்?
புரொபஸர்: எனக்கு இக்கேள்விக்கு பதில் தெரியாது. இரு டிக்ஷனரியைப் பார்த்துட்டு வரேன். (அவர் எழ எத்தனிக்கிறார்)
மீனாட்சி: அதெல்லாம் வேணாம். உட்காருங்க. நானே சொல்றேன்.
புரொபஸர்: நீ சொல்லிட்டே இரு. நான் இதோ பார்த்திட்டு வந்திடறேன்.
மீனாட்சி: கணேஷ் நீ ஒரு ஊருக்கு போக திட்டமிட்டு டிக்கெட் புக் பண்ணி அங்கு போய் சேர்ந்தா அது arrive. You arrived at Ooty at 6 am. அமேசான் பார்சல் என் வீட்டு முகவரிக்கு இன்னிக்கு இந்த நேரத்துக்கு வந்து சேரணுமுன்னு ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதனால் parcel arrived. அதே போல நீ ஒரு விசயத்தைப் பற்றி சர்ச்சை செய்து குழப்பி சண்டை போட்டு கடைசியில் ஒரு முடிவுக்கு வருவதையும் arriving at a conclusion என்று சொல்வாங்க.
கணேஷ்: அப்போ reach?
மீனாட்சி: Reach என்பதுக்கும் கிட்டத்தட்ட அதே அர்த்தம் தான். Arrive என்பதுக்கு இணையாக reach-ஐயும் பயன்படுத்தலாம். You reached Ooty at 6 am. The parcel has reached me. ஆனால் தெளிவான இலக்குடன் பயணம் செய்து இடத்தை அடைவதற்கு arrive at தான் சரியான பதம். அது reach-ஐ விட கெளரவமான, அதிகாரபூர்வமான ஒரு சொல் எனலாம். இரண்டுக்கும் வேறு ஒரு நுணுக்கமான வித்தியாசமும் உண்டு. நீ ரொம்ப சிரமப்பட்டு அலைந்து திரிந்து ஓர் இடத்தை அடைந்தால் அது reach. உதாரணமா you reached the top of Himalayas after climbing for almost a week. ரெண்டுக்கும் இன்னொரு வித்தியாசம் கவனிச்சியா?
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.