புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள். செவிலி வந்து ஒவ்வொருவரிடமும் மருத்துவக் கோப்பை அளிக்கிறார். அடுத்து, வரிசையில் மருத்துவரை சந்திக்கலாம் என்கிறார். முதலில் நடாஷா தன் நாயுடன் மருத்துவர் அறைக்குச் செல்கிறார். அடிக்கடி நெர்வஸôக மீசையை தடவிக் கொள்ளும் மீசைக்காரர் புரொபஸரிடம் பேச்சுக் கொடுக்கிறார்.
மீசைக்காரர்: சார், நான் ஒண்ணு கேட்கலாமா?
புரொபஸர்: என்ன ஒண்ணுக்கு போகணுமா? You wanna go to the loo?
மீசைக்காரர்: அந்த ஒண்ணுக்கு இல்ல சார்? ஒண்ணே ஒண்ணு கேட்கலாமா?
புரொபஸர்: சாரி... ஏன் ஒண்ணு ஒண்ணுன்னே படுத்தறீங்க? என்ன தான் பிரச்னை?
மீசைக்காரர்: அதே தான். அதைத் தான் உங்க கிட்ட சொல்லணும்.
புரொபஸர்: சொல்லுங்க...
கணேஷ்: சார்... அதுக்கு முன்னாடி எனக்கு ஒண்ணு கேட்கணும்
புரொபஸர்: எனக்கு ஏதோ கிரேஸி மோகன் நாடகத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு. என்ன சொல்லுடா?
கணேஷ்: அதென்ன சார் லூ?
புரொபஸர்: டாய்லெட்
கணேஷ்: பிறகு டாய்லெட்டுன்னே சொல்ல வேண்டியது தானே?
புரொபஸர்: சிலருக்கு வெளிப்படையா சொல்லத் தயக்கமாக இருக்கும். அதனால பல பெயர்கள் உருவானது. "உச்சா', "சுச்சூ' போல. இது கழிவறைக்கு போவது ஒரு குழந்தைத்
தனமான விளையாட்டு என்பது போல தொனி கொடுக்கிறது. அந்த அசிங்க உணர்வை மறைக்க பயன்படுகிறது. லூவும் அப்படித் தான். இது ஒரு பிரிட்டீஷ் கொச்சை சொல்.
மீசைக்காரர்: அந்த பெயரே வித்தியாசமா இருக்கில்ல?
புரொபஸர்: ஆமா, அதன் தோற்றமே வித்தியாசமானது தான். பல விளக்கங்கள் உண்டு. ஒரு விளக்கத்தின் படி ஐரோப்பாவில் மத்திய காலத்தில் பெரிய செல்வந்தர் வீடுகளில் மட்டுமே கழிவறைகள் இருந்தன. ஆனால் சாக்கடைக் குழாய்கள் இல்லை. அதனால் கழிவறைக் கழிவை நேரடியாய் தெருவில் கொட்டி விடுவார்கள். மாடியில் இருந்து அப்படியே தூக்கி சிலர் கீழே ஊற்றுவார்கள். அப்போது சாலையில் போகிறவர்களை எச்சரிக்கும் விதமாய் gardyloo என கத்துவார்களாம். கார்டிலூ என்பது ஒரு பிரஞ்சு சொற்றொடர். இதன் பொருள் - தண்ணீர் வருகிறது கவனம். இதுவும் கழிவு என்பதை நேரடியாய் குறிப்பிடாமல் மறைப்பதற்கான ஒரு மாற்று வழி தான். இந்த வழக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் கழிவறைக்கு லூ என்னும் சொல் நினைத்து விட்டது என்கிறார்கள்.
இன்னொரு விளக்கமும் பிரஞ்சில் இருந்து தான். முன்பு பிரான்ஸில் யாராவது உச்சாவுக்கு போக வேண்டுமானால் அந்த இடத்துக்கு போய் வருகிறேன் என சொல்வார்களாம். அந்த இடம் என்றால் பிரஞ்சில் le lieu. இரண்டாவது சொல்லுக்கு பொருள் "இடம்'. இதில் இருந்தே கழிவறைக்கு லூ எனும் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
கடைசி விளக்கமும் சுவாரஸ்யமானது. இருபதாம் நூற்றாண்டில் இப்போதுள்ள flush tank கொண்ட கழிவறைகள் பரவலாகின்றன. அப்போது flush tank I cistern என்பார்கள். அப்போது இந்த சிஸ்டெர்ன் தயாரிப்பில் முன்னணியில் இருந்த நிறுவனம் Waterloo. எப்படி ஜெராக்ஸ் எனும் நிறுவனத்தின் பெயர் அந்த கருவிக்கு வந்து ஒட்டிக் கொண்டதோ அப்படியே Waterloo இருந்து லூ எனும் சொல்லும் உருவாகி பயன்பாட்டில் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
மீசைக்காரர்: அருமை சார்
புரொபஸர்: அப்போ நீங்க லூவுக்கு போகலையா?
மீசைக்காரர்: அதைத் தானே சார் ஆரம்பத்தில இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன். எனக்கு உங்க கிட்ட வேறொண்ணு சொல்லணும்.
புரொபஸர்: சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு பாத்ரூம் போகணும்.
கணேஷ் (குறுக்கிட்டு): சார் why must you go to a bathroom unless you are going to take a bath?
புரொபஸர்: தம்பி, அப்படீன்னா வாஷ்ரூம் போறவங்க உடம்பை சுத்தம் மட்டுமா பண்ணறாங்க?
கணேஷ்: ஓ
புரொபஸர்: வாஷ்ரூம் என்றால் பாத்ரூமோட அமெரிக்க வடிவம். கழிப்பறையும் குளியலறையும் சேர்ந்தே இருப்பது தான் பாத்ரூம் அல்லது வாஷ்ரூம். பெரும்பாலான வீடுகளில் அப்படித் தான் இருக்கின்றன. ஆகையால் தான் பாத்ரூம் அல்லது வாஷ்ரூம் போவதென்றால் டாய்லெட் போவது எனும் பொருள் வருகிறது. It's a euphemism. அதாவது ஓர் அசிங்கமான விசயத்தை நாசூக்காய் மறைமுகமாய் சொல்வது.
மீசைக்காரர்: சார் நான் ஒண்ணு...
(கோபமாய்) கடைசி வரைக்கும் என்னை கேட்கவே விடலியே?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
வாக்குரிமையைப் பறிக்கும் மோடியும் பாஜகவும்: மமதா பானர்ஜி

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

