வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 168
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் மீசைக்காரர் எனும் போலீஸ்காரரும் அங்கு காத்திருக்கிறார்கள். அவர்கள் இடையிலான உரையாடலில் single மற்றும் silent vowels பற்றி பேச்சு வருகிறது. இந்த vowel பயன்பாடு குறித்து புரொபஸர் மேலும் விளக்குகிறார்.
புரொபஸர்: ஒரு சொல்லில் இரண்டு வவல்ஸ் வருகிறது - இவற்றில் சொல்லின் இறுதியில் தொக்கி நிற்கும் வவல் தான் சைலண்ட் வவல். இதை நாம் உச்சரிக்கத் தேவையில்லை.
உதாரணமா Bottle என்பதில் கடைசி ங்யை நாம் உச்சரித்து பாட்டிலே / பாட்டிலி என்று படிப்பதில்லை. அடுத்த விசயம் முக்கியம் - முதல் வவலை சற்றே இழுத்து உச்சரிக்க வேண்டும். உதாரணமா, ப-ஒ-ஒள-ட்டில் என நீட்டிக்க வேண்டும். ஏனென்றால் அது ஒரு லாங் வவல். இந்த விதிமுறைப்படி இறுதியாய் ஒரு வவல் தொக்கி நிற்கிறதென்றால் சொல்லின் நடுவே வரும் மற்றொரு வவல் ஆட்டோமெட்டிக்காக லாங் வவல் ஆகி விடும். அதை நான் நீட்டி சொல்ல வேண்டும். அப்போது தான் அது அழகாக ஸ்டைலாக இருக்கும்.
கணேஷ்: சார், Style இன்னோர் உதாரணம் தானே. ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்...
நடாஷா: ஆமா அந்த பாட்டில் உச்சரிப்பு தப்பா இருக்கும். லாங் வவலை போதுமான படிக்கு நீட்ட மாட்டார்கள். ஆனால் "சிவாஜி' படத்தில் வரும் "ஸ்டைல்' பாடலில் லாங் லவல் சரியாக வந்திருக்கும்.
கணேஷ்: ஒரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன் லைன், ஒன்றாகச் சேர்ந்தால்...
ஜூலி: இருங்க இருங்க, style - இல் ஒரு வவல் தான். அதனால் நான் சொன்ன விதிமுறையில் இது பொருந்தாது.
புரொபஸர்: ஆமா, ஆனால் ஸ்டைலில் y ஒரு வவல் போல செயல்படுகிறது.
ஜூலி: True, True..
புரொபஸர்: இந்த பழ்ன்ங் இருக்கிறதே அதைப் பற்றியும் ஒரு விதி உள்ளது.
கணேஷ்: என்ன?
புரொபஸர்: இரண்டு வவல்கள் சியாமீஸ் இரட்டையர் போல ஒட்டியபடி வந்தால் முதல் வவல் லாங் வவலாக இருக்கும். உதாரணமா true, clue, blue, shoe. அதே போல beat, leaf, wheat, train, load.
நடாஷா: சார் beat என்பதில் "பீட்' என உச்சரிப்பு வருகிறது. அதில் "ஈ' எனும் ஒலியை அழுத்தி உச்சரிக்கிறோம். Clue, blue, shoe ஆகியவற்றிலும் அப்படியே. நாம் கடைசி வவலை மெளனமாகவே விடுகிறோம். ஆனால் train, load ஆகிய சொற்களைப் பொறுத்தமட்டில் I, a ஆகிய வவல்களும் சேர்ந்து தானே ஒலிக்கின்றன. ஆனால் அடுத்த இரு சொற்களை டிரெயின், லெவுட் என நாம் உச்சரிக்கும் போது நாம் இரண்டு வவ்வல்களையும் தானே உச்சரிக்கிறோம்.
புரொபஸர்: ஆமாம் சரி தான். நீ சொல்றதை நான் மறுக்கல. முழுக்க சரி. ஆனால் டிரெயின் எனும் போது நாம் டிரெ என்பதில் உள்ள "எ'யை தான் நீட்டி உச்சரிக்கிறோம். "எ' அடுத்து வரும் "ஐ'யை சற்றே மென்மையாய் உச்சரிக்க வேண்டும்.
நடாஷா: Pip, sip, lip, dip இந்த சொற்களில் நாம் “ண்’ ஐ அழுத்தாமல் தானே உச்சரிக்கிறோம். சின்ன சொற்கள் என்பதாலா?
புரொபஸர்: அப்படி இல்ல. ஒரு வவலுக்கு அடுத்ததாய் ஒரு JÚ consonant வருமென்றால் அங்கு வவலை மென்மையாய் உச்சரிக்க வேண்டும் என்பது விதிமுறை. வெறுமனே சின்ன சொல் என்பதால் அல்ல.
நடாஷா: ஆனால் அது சின்ன சொல் தானே?
புரொபஸர்: சின்ன சொல் தான். ஆனால் அதுவல்ல வரைமுறை. Bomb, tomb, comb ஆகிய சொற்களும் சின்ன சொற்கள் தாம். ஆனால் அங்கு வவலுக்கு அடுத்தபடியாய் எவ்வளவு consonants வருகின்றன?
நடாஷா: ம்ம்ம்... ரெண்டு. M and b.
புரொபஸர்: ஆமா அதனால் தான் நான் சொன்ன விதிமுறை இங்கு பொருந்தாது. Tip என்பதில் போல bombஇல் ஞவை சன்னமாய் உச்சரிக்க மாட்டோம். ஏனென்றால் அங்கு வவலுக்கு அடுத்து இரண்டு consonants வருகின்றன. ஆகையால் “O’ சற்றே இழுத்து உச்சரிப்போம்.
கணேஷ்: சார் அந்த bark up the wrong tree கதை என்ன? நாய்க்கும் மரத்துக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: ஓ அதுவா, அது ஒரு சுவாரஸ்யமான கதை. சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...