விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 126

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்தித்த சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் கேட்கப்

News image
Updated On :13 பிப்ரவரி 2018, 5:20 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்தித்த சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் கேட்கப் போவதாகவும், அதில் குறைந்தது மூன்று கேள்விகளுக்காவது அவன் சரியாக பதிலளிக்காவிட்டால் அவனது காதலி ராக்கியின் தலை வெடித்து சிதறி விடும் என கூறுகிறது. ஜூலி சரியாக அவன் காதலியின் பெயரைக் கணித்து சொல்லி விட்டதால் ஜூலிக்கு மந்திர சக்தி உண்டு என அவன் நம்புகிறான். ஆக, அவன் சவாலை சற்றே பயத்துடன் ஏற்கிறான். 

சர்வர்: ஓகே... ஜூலி Fire
கணேஷ்: Fire ஆ?
ஜூலி: கேள்விக் கணைகளைத் தொடு என சொல்கிறான்.
புரொபஸர் அங்கு வருகிறார்: நான் இங்க நடக்கிறதை கவனிச்சிக்கிட்டு தான் இருந்தேன். இதெல்லாம் உனக்குத் தேவையாப்பா? பொழப்பைப் பாரு. இதுகிட்ட போய் விளையாடிகிட்டு.
சர்வர்: சார்... இது விளையாட்டில்ல. மரணத்துடன் நான் ஆடும் சடுகுடு ஆட்டம்.
புரொபஸர்: இந்த காலத்தில போய் தலை வெடிக்குமுங்கிற கதையெல்லாம் நம்பி கிட்டு. Superstition.
ஜூலி: Don't spoil the fun. 
கணேஷ்: ஆமா சார் don't be a bull in a china shop.
புரொபஸர்: ஓ... நீயும் இவங்க கூட சேர்ந்திட்டியா. ஆனால் நீ பயன்படுத்துன idiom தப்பு. Bull in a China shop என்றால் கவனமாய் கையாள வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை முரட்டுத்தனமாய்க் கையாண்டு சொதப்புவது; tactful ஆக இல்லாமல் clumsy ஆக இருப்பது. பீங்கான் பாத்திரங்கள் விற்கும் கடையில் ஒரு வெறிபிடித்த காளை நுழைந்தால் என்னவாகும் என்பது தான் இதிலுள்ள கற்பனை. "விண்ணைத் தாண்டி வருவாயா?' படத்தில் த்ரிஷாவின் அண்ணனை சிம்பு அடித்து வீழ்த்தும் இடத்தில் he is like a bull in a China shop. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? 1940 இல் அமெரிக்காவில் ஜிம் மோரன் என்பவர் ஒரு விளம்பர நோக்கிற்காக ஒரு காளையை பீங்கான் பாத்திரக் கடை ஒன்றுக்குள் அனுப்பினார். 2007இல் Mythbusters எனும் டிவி நிகழ்ச்சிக்காக காளைகள் பீங்கான் கடைக்குள் புகுந்தால் எப்படி இருக்கும் என்பதை கணினி கிராபிக்ஸ் மூலம் simulate பண்ணிப் பார்த்தார்கள். அதாவது ஒரு வெற்றுக் கடைக்குள் காளைகளை அனுப்பி அங்கே அலமாரிகளுக்கு இடையே காளைகளின் அசைவுகளை வைத்து உண்மையிலேயே காளைகள் இருந்திருந்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கணித்தார்கள். முதல் சம்பவம் மற்றும் இரண்டாவது பரிசோதனையின் போது அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள் தெரியுமா? காளைகள் நம்மை விட கவனமாய் நாசூக்காய் கடைக்குள் நடக்கின்றன, திரும்புகின்றன, வெளிவருகின்றன. ஒரு பீங்கான் கூட உடையவில்லை. ஆக, bull in a china shop என்பது ஒரு ம்ஹ்ற்ட். ஒரு தொன்மம். மனிதர்கள் தான் கவனமற்றவர்கள்.
கணேஷ்: அடேயப்பா... எவ்வளவு விசயம் இதன் பின்னால் இருக்குது. சரி... இதில் என்ன தப்பு? 
புரொபஸர்: உன் பயன்பாட்டின் பொருத்தம் மட்டுமே தப்பு. You should have said “don't be a spoilsport".
ஜூலி: அதை விட killjoy மேல். எல்லாரும் ஜாலியாக ஒரு விசயத்தைப் பண்ணும் போது ஒருவர் மட்டும் அதைப் புரிந்து கொள்ளாமல் மேதாவியாய் நடந்து கொண்டு எரிச்சலூட்டுவது,
கணேஷ்: ஓ... பூஜை நடுவே கரடி
ஜூலி: கிட்டத்தட்ட (சர்வரை நோக்கி) என்னப்பா ரெடியா?
சர்வர்: Ready to roll
ஜூலி: முதல் கேள்வி. ஆங்கிலத்தில் மிகச் சின்ன வாக்கியம் எது?
சர்வர்: I love you
ஜூலி: அடச்சீ... rejected
சர்வர்: Yes
ஜூலி: ம்ஹும்... இல்ல
சர்வர்: யார் சொன்னா? நீ எங்கிட்ட Are you ready என்று கேட்கிறாய். நான் yes என்று பதில் சொல்றேன். அது பதில் தானே? அது ஒரே சொல் தானே?
ஜூலி: தம்பி, அது பதில் தான். ஆனால் அது ஒரு வாக்கியம் அல்ல. I am ready என்பது தான் வாக்கியம். ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இருக்க வேண்டும். நான் சொன்ன உதாரணத்திலே ஒரு துப்பு (clue) உள்ளது. கண்டுபிடி...
சர்வர்: இல்லை... இல்லை. வெயிட் பண்ணுங்க. (தனது ஸ்மார்ட்போனை எடுத்து இது பற்றி கூகுளில் தேடி வாசிக்கிறான்.) இதோ இருக்கே...
ஜூலி: என்ன?
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.