விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்: 120

புரொபஸர் கணேஷிடம் நாய் காலைத் தூக்கி உச்சா போவதற்கான ஆங்கிலச் சொல் என்னவெனக் கேட்டு அவன் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.

News image
Updated On :2 ஜனவரி 2018, 7:28 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் கணேஷிடம் நாய் காலைத் தூக்கி உச்சா போவதற்கான ஆங்கிலச் சொல் என்னவெனக் கேட்டு அவன் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.

கணேஷ்: என்ன சார் அது?
புரொபஸர்: இதே ஸ்ரீர்ஸ்ரீந் தான். Julie 
cocked its leg against the gate. Cock a leg என்று தனியாய் ஒரு மரபுத்தொடரே உள்ளது. நாய் காலைத் தூக்கி உச்சா போறதுக்கேயான தனியான மரபுத்தொடர் இது. 
கணேஷ்: சரி சார், இதுக்கும் cocktailக்கும் என்ன தொடர்பு?
புரொபஸர்: இரு வரேன்டா. வைக்கோல் போருக்கு ஆங்கிலத்தில் என்ன சொல் தெரியுமா?
கணேஷ்: ம்ஹும்
மீனாட்சி: A cock of hay.
புரொபஸர்: ஆமா. சரி... காக்டெய்லுக்கு வருவோம். எனக்கு ஒரு நண்பன் இருந்தான், ராமபத்திரன்னு பேர். அவனுக்கு மதுவை ஜூஸ், கோக் மாதிரியான சமாச்சாரங்களில் கலந்து குடிக்கிறவங்களைப் பார்த்தாலே பிடிக்காது. அது கேவலமான பழக்கமுன்னு சொல்வான். குடிக்கிற வஸ்துவோட அசலான சுவையை அறிய அதைத் தண்ணீர் கலந்தோ அல்லது கலக்காமலோ குடிக்க வேண்டும் என்பான். அவனை மாதிரியானவங்க தான் காக்டெய்ல் எனும் பெயரை கொண்டு வந்தாங்க. அது கொஞ்சம் மட்டமானது, போலியானது, இரண்டாம் தரமானது, ஒரிஜினல் கிடையாது எனும் அர்த்தத்தில் அதை பயன்படுத்தத் தொடங்கினாங்க. ஆனால் பின்னர் காக்டெய்ல் உலகம் பூரா பிரபலம் ஆன பின் இப்போது அந்த அர்த்தத்தில் அது புழங்குவதில்லை. என்றாலும் அப்படித் தான் அதன் கதை ஆரம்பித்தது.
கணேஷ்: இப்பவும் காக் + டெய்ல் எப்படி அந்த சரக்குக்குள் வந்ததுன்னு நீங்க சொல்லல.
புரொபஸர்: இருடா வரேன். முன்பு குதிரைப் பந்தயம் நடக்கிற இடங்களில் தான் அதிகம் குடிகாரர்கள் புழங்கினார்கள். குதிரைகளில் ல்ன்ழ்ங்க்ஷழ்ங்க் குதிரைகள் உண்டு. அதாவது சுத்தமான கலப்பில்லாத வம்சாவளியைச் சேர்ந்த பந்தயக் குதிரைகள். இவற்றுக்கு வால் நீளமாய் மதமதவென இருக்கும். ஆனால் கலப்பின குதிரைகளுக்கோ வாலை பாதி நறுக்கி விடுவார்கள். அவ்வால்கள் பார்க்க சற்று தூக்கினாற் போல 90 டிகிரியில் இருக்கும். இந்த வகைக் குதிரைகளை பந்தயத்துக்கு வரும் பார்வையாளர்கள் cock tail  என அழைத்தனர்.
கணேஷ்: ஏன் சார் அப்படி வாலை வெட்டினாங்க?
புரொபஸர்: அதுவா... இந்த குதிரைகள் பந்தயத்துக்கு போகாத சமயங்களில் வண்டிக் குதிரைகளாய் வேலை செய்யும். வால் நீளமாய் இருந்தால் குதிரையை அதன் வண்டியுடன் இணைக்கும் கடிவாளத்தில் போய் அது மாட்டிக் கொள்ளும். அதனாலே வெட்டினார்கள். இதை docking என்பார்கள். 
கணேஷ்: சரி
புரொபஸர்: இப்படி ஸ்ரீர்ஸ்ரீந் ற்ஹண்ப் குதிரைகளைப் பார்த்த பார்வையாளர்களுக்கு அங்கு வழங்கப்படும் பழச்சாறு கலந்த மதுவும் கலவை தானே எனத் தோன்றியது. வால் வெட்டின கலப்பின குதிரை போன்றே இந்த வகை மதுவும் தூய்மையானதோ அசலானதோ இல்லை எனும் பொருளில் அதற்கும் cocktail எனப் பெயரிட்டனர். காலப்போக்கில் அது நிலைத்து விட்டது.
கணேஷ்: அபாரம். இப்படி ஒரு கதை இருக்குமென நான் சத்தியமாய் நினைக்கவில்லை. 
புரொபஸர்: ஓகே... ஆனால் இன்னொரு பெயர்க்காரணமும் இருக்கிறது. இது முந்தின கதை அளவுக்கு colorful அல்ல.
கணேஷ்: பரவாயில்ல... சொல்லுங்க கேட்போம்.
புரொபஸர்: Dregs கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: இல்லையே சார்.
புரொபஸர்: நீ குடிக்கிறியே காப்பி ...
கணேஷ்: ஆமா
புரொபஸர்: குடிச்சு முடிச்சதும் அதில் தேங்குமே மீதம் அது தான் dregs. பழங்கால இங்கிலாந்தில் க்ழ்ங்ஞ்ள்க்கு ற்ஹண்ப்ண்ய்ஞ்ள் என ஒரு பெயர் இருந்தது. அப்போதெல்லாம் சாராயத்தை பெரிய பீப்பாய்களில் ஊற்றி வைத்திருப்பார்கள். அதன் அடிப்பாகத்துக்கு சற்று மேலே ஒரு சின்ன குழாய் இருக்கும். அதைத் திறந்து வாடிக்கையாளர்களுக்கு பிடித்துக் கொடுப்பார்கள். இந்த குழாய்க்கு ஒரு பெயர் … என்ன எனச் சொல் பார்ப்போம்.
கணேஷ்: cock
புரொபஸர்: கரெக்ட். அந்த காலத்தில் பீப்பாய்கள் காலியான பின் மீதமாய் தேங்கும் க்ழ்ங்ஞ்ள்ஐ தனியாய் சேகரித்து ஒன்று கலந்து ஒரு மதுவை தயாரிப்பார்கள். இதன் சுவை அபாரமாய் இருக்குமாம். இதை சந்தையில் ஏலம் விடுவார்கள். இதன் பெயர் தான் cocktail. அதாவது cock வழியாக மீதம் வரும் tailings. அதுவும் பலவகையான மதுக்களை கலந்தது. அப்படித் தான் இப்பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
கணேஷ்: இந்த கதையும் நல்லா இருக்குது சார். அப்புறம் உங்களுக்கு ராமபத்திரன்னு ஒரு பிரண்டு இருந்தார்னு சொன்னீங்களே. அவர் இப்ப என்ன பண்ணுறார்?
புரொபஸர்: செத்துட்டான். குடிச்சு குடிச்சு liver cirrhosis வந்து மேலே போயிட்டான்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.